பிஎட் படிப்பு: விரைவில் 2-வது கட்ட கவுன்சலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

பிஎட் படிப்பு: விரைவில் 2-வது கட்ட கவுன்சலிங்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில்காலியாகவுள்ள 505 இடங்களை நிரப்ப அடுத்த வாரம் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,155 பி.எட் இடங்களை நிரப்ப கடந்த 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. சிறப்பு ஒதுக்கீடு-3, பொதுப் பிரிவு-48, பிசி - 137, பிசி (முஸ்லிம்) - 49, எம்பிசி - 127, எஸ்சி-85, எஸ்சி (அருந்ததியர்) - 46, எஸ்டி-10. கலந்தாய்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி 301 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். பொதுவாக கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அவை 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது வழக்கம்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது: பி.எட் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 505 காலியிடங்கள் உள்ளன. இவற்றில் 3 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கானது (பார்வையில்லாதவர்கள்). கலந்தாய்வு மூலம் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்று குறிப்பிட்ட கல்லூரியில் மாணவர் சேர்ந்திருப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் அரசு கல்வியியல் முதல்வர்களிடம் 17-ம் தேதி பட்டியல் கேட்கப்படும். இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆகஸ்ட் 18 அல்லது 19-ம் தேதி 2-வது கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

2 comments:

  1. when starting second counseling

    ReplyDelete
  2. Second phase counselling epa start akum?B.Ed Counselling Details matum entha news paper laium poda matrangale...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி