இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்


"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்."

இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது.


தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும், குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு : இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? : பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

25 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. BCM PAPER 1 ABOVE 90 HOW MANY MEMBERS DETAIL PLS

      Delete
    2. paper 2 ku evolo posting? athula BCM ku ethanai seat? what's your wife weightage? suruli vel sir?and neenga etha dist?

      Delete
    3. sorry paper 1ku evolo posting.? mela thappa type pannitaen.

      Delete
  2. தமிழ் வழி முன்னுரிமையி ல் நிறைய குளறுபடிகள் உள்ளதே !!!!!!!

    ReplyDelete
    Replies
    1. குறைதீர்முகமில் முறையிட்டு திருத்திக்கொள்ளலாம்...

      Delete
    2. sri sir.. exservice men quota illaya bt teachers ku ?

      Delete
    3. That too the candidates must be exservice man nu solraanga. How s that possible.

      Delete
    4. Hi.. Friends.. Kindly Do This:
      தமிழ் வழி - முன்னுாிமையை விட,

      (Most of (PWD) Person With Diability- P.H (O) - Reservation claimed as - 'No')
      மாற்றுத்திறனாளி - முன்னுாிமையில் ஒதுக்கீடு செய்தவா்களில் பலருக்கு - குளறுபடி உள்ளது..

      மாற்றுதிறனாளி தோழா்/தோழிகள் - உடனடியாக இதை அறிந்து - அந்தந்த மாவட்ட தேதி வாாியாகவுள்ள, குறிப்பிட்ட மண்டலத்திற்கு சென்று சாிசெய்து அறிவுறுத்தபடுகிறாா்கள்..
      **
      குறிப்பாக...
      கிருஷ்ணகிாி (fully-No nu than iruku), மதுரை, விழுப்புரம் மற்றும் இன்னும் பல மாவட்ட நண்பா்களின் மாற்றுதிறனாளிகான ஒதுக்கீட்டில் "No" என்று தான் உள்ளது..

      *****
      இதுவரை 100++ மாற்றுதிறனாளிகளின் வெயிட்டேஜ் -யை பாா்த்தபோது 40++ -க்கும் மேற்பட்டோா்க்கு ஒதுக்கீட்டில் "No" என்று உள்ளது..

      ஆகவே.. கல்விச்செய்தி நண்பா்களே.. - நீங்கள், அருகில் அறிந்த - மாற்றுதிறனாளி நண்பா்களுக்கு இதை கூறி, மாற்றம் இருப்பின் சாிசெய்துகொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்..
      (தமிழ் வழி முன்னுாிமையும், (இனப்பிாிவிலும - ஒரு சிலருக்கு) பலருக்கு 'No' என்று தான் உள்ளது..

      நன்றி..
      ப.கண்ணன் - திண்டுக்கல்..

      Delete
    5. bharathi R இறுதிபட்டியல் வெளியிடும்போது தெரியும்.. இதுவரை exservice man பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை அதனால் இதை பற்றி நீங்கள் இப்போதே TRB இடம் தகவல் கேளுங்கள்...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. sg, bt, pg, college trb இவை அனைத்தின் இறுதி பட்டியல் ஒன்றாக வெளியிட்டு counselling இறுதி பட்டியல் வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. bt மட்டும் தனியாக இப்பொழுது வெளியிட்டால் ஒரு markல் வேலை வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதிக வழக்குதொடர வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  5. இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

    ReplyDelete
  6. SG ku vacancy list seekirama vitta nalla irukum.

    ReplyDelete
    Replies
    1. BCM PAPER 1 ABOVE 90 HOW MANY MEMBERS DETAIL PLS

      Delete
  7. Matha iruthikulaaaa Adapavikala

    ReplyDelete
  8. ஊகங்களும் வதந்திகளுமே செய்தியா? ஒரு வாரமாக இன்று நாளை என்று ஆரூடம் கூறியவர்கள், இம்மாத இறுதிக்குள்ளா? சரியான செய்தி கிடைக்காவிட்டால் வதந்திகை பரப்பாதீர்கள்.

    ReplyDelete
  9. Sri sir paper 2 army quota sari pathankala please reply

    ReplyDelete
  10. WHAT WILL BE THE EFFECT IF TRB PUBLISHES ALL THE RESULTS (Assistant Professor, P.G. Assist., B.T. Assist. & Secondary Grade Teachers) AT A TIME?

    Its good to hear if TRB publishes results for all those who competed for the post of Assistant Professor, P.G. Assist., B.T. Assist., & Secondary Grade teachers at a time, and it is the moment we all have been waiting for. But the bitter truth behind this will disappoint more candidates, its because there are scenarios where a single candidate had appeared and selected for all Assistant Professor, P.G. Assist., B.T. Assist., and there are even candidates who appeared and selected for both B.T. Assist., & Secondary Grade teachers.

    Okay!
    what is the bitter truth ?
    what will be the repercussion?
    who is going to suffer because of this?
    why to bother about candidates who appeared for more than one examination?

    Here's the fact, if all the above said results are published at a time there will be dilemma for those who possess eligibility for more than one post and of course they will prefer the better post at last leaving the other one unfilled. If this case happens for more candidates more number of posts will be left unfilled leaving them as additional selection or backlog and the sufferers are those who possess following cut off in the above said examinations.

    THUS CANDIDATES WHO POSSESS LEAST CUT OFF WILL LEFT UNATTENDED AND THEY WILL HAVE TO WAIT FOR ANOTHER YEAR OR SO EVEN IF THERE IS VACANT POST WHICH THEY DESERVE AND THEY MAY HAVE TO FACE ANOTHER EXAMINATION!

    Hence we humbly request TRB to publish the results in order of higher to lower cadre to facilitate the blameless candidates.

    Reference: Dinamalar News on 07.08.2014.

    http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25679&cat=1

    By
    Mr. V. Ashokan,
    bioashok2007@gmail.com
    bioashok.blogspot.in
    9500881414

    ReplyDelete
  11. wishes for all pg guys

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி