தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி.


தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரையில் நாளை (9ம் தேதி) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களின் வேலை,கல்வி தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்குதல், சஸ்பெண்ட் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து கருணாகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பதவி உயர்வு, பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாஸ்போர்ட் மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்றால் கூட இயக்குநர் அலுவலகத்தில் அனுமதிபெற வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த திருச்சி, சென்னையில் மையம் அமைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

6 comments:

  1. Ne irantha pinbum un varalaru piraral pesapada vendumayin ontru sirantha padaipugalai uruvaku allathu pirar ungalaipatri ezhuthum alavirku arthamulla vazhkaiyai vazhnthu kattungal by
    Benjamin Franklin

    Kaalai vanakkam.....

    ReplyDelete
  2. Dear Vajeeth bhai from viluppuram send ur Email and Tet reg no, I will send you total 47/53 urdu candidates details.. My email: cm_mubarakali@yahoo.co.in

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. We don't believe TRB!!
    I know TRB very well !!
    Bramanda medai also not possible on Sep 05. !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி