தொடக்கக்கல்வி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த 5,000 தமிழ் சொற்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த தொடக்கக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி, ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வசிப்புத் திறனைமேம்படுத்த தமிழில் 5000 வார்த்தைகளையும், ஆங்கிலத்தில் 600 வார்த்தைகளையும் கற்பிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்விமாணவ, மாணவிகள் ஆங்கிலத்தை சரளமாக படிக்க கடந்த ஆண்டு ஆசிரியர்கள் 200 சொற்களை கற்றுக் கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.மேலும், அதற்கான கையோட்டினைத் தயாரித்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கல்வித்தரம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்தது.
இவற்றை மேலும் அதிகரிக்க, இந்தாண்டு ஆங்கிலத்தில் 400 வார்த்தைகளையும், தமிழ்ப் பாடத்தில் 5000 வார்த்தைளையும் தயார் செய்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், 5000 தமிழ் வார்த்தைகளைக் கொண்ட புத்தகத்தை அரசு இலவசமாக, ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி