மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு, கோரிக்கை - தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு, கோரிக்கை - தினத்தந்தி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அவரிடம் அளித்தனர். இந்த மனுவை பிரதமர் நரேந்திரமோடியிடம் சேர்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த மனுவில், ‘ரெயில்களில் இ–டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியினை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் உதவியாளருக்கும் விரைவில் வழங்க வேண்டும், விமான போக்குவரத்தில் 50 சதவீத பயண கட்டண சலுகை, புதிய உரிமை பாதுகாப்பு சட்டத்தை தகுந்த திருந்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும், வருமானவரி செலுத்துவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி