அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 760 நர்சரி பள்ளிகள் மூடப்படும்.. - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 760 நர்சரி பள்ளிகள் மூடப்படும்.. - தினமணி

மிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மழலையர் (நர்சரி) பள்ளிகள் உள்ளன. இவை அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து கொண்டு, பிளே ஸ்கூல் என்ற பெயரிலும் பள்ளி களை நடத்தி வருகின்றன. சென்னையில் மட்டும் அங்கீகாரம் பெறாத 760 நர்சரி மற்றும் பிளே ஸ்கூல்கள் உள்ளது. எனவே அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பால் வசந்தகுமார், ரவிசந்திர பாபு ஆகியோர் விசாரித்து 2 வாரத்தில் தமிழக அரசு மற்றும் 760 பள்ளிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மழலையர் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பின்னர் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதாடும் போது, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் நர்சரி பள்ளிகள் மூடப்படும். அதற்காக, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க வும், அக்டோபர் 15ம் தேதிக்குள் விளக்கம் பெறவும், நவம்பர் 30ம் தேதிக்குள் தொடக்க கல்வி அதிகாரிகள் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிய அங்கீகாரம் பெறாவிட்டால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளை ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் மூட உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20112012ம் கல்வி ஆண்டு அங்கீகாரம் பெறாத 1459 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தொடர்ந்து மற்ற அங்கீகாரம் பெறாத பள்ளிகளும் மூடப்படும். அதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றார்.இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அரசே அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்பதால் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.

1 comment:

  1. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி