ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2014

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தமிழக அரசை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 75 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூறப்படுகிறது.

மீதமுள்ள 25 சதவீதத்தில் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஓய்வூதிய பங்களிப்புத் திட்டம் ரத்து போன்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110-வது விதியில் முதல்வர் அறிக்கையில், இந்தக் கோரிக்கை நிறைவேறும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவது தாமதமானால், அனைத்து இயக்கங்களையும் திரட்டி ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆசிரியர்கள் நியமனம் உடனே நடைபெற வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் நியாயம் எனலாம் நீங்கள் சுயநலம் பிடித்தவர்கள். உங்கள் பணியை எங்களுக்கு விட்டு தர தயாரா இதே ஊதியத்தில் வேலை செய்ய நாங்கள் தயார்

    ReplyDelete
  3. Kindly request the govt.
    Pls allow them to work
    Dont confuse the govt.

    By
    Un lucky
    Tet passed students

    ReplyDelete
  4. முதல்ல வாங்கர சம்பலதுகு வேலை செய்யுக. சோறு செரிமாணம் ஆகாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி