யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சினை - இந்தி பேசாத மாநில எம்.பி.,க்கள் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சினை - இந்தி பேசாத மாநில எம்.பி.,க்கள் எதிர்ப்பு.


மத்திய பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், இந்தி மொழி பேசும், வட மாநில தேர்வர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், இந்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

தேர்வர்கள் எதிர்ப்புயு.பி.எஸ்.சி., நடத்தும் முதல்நிலைத் தேர்வின் திறனறித் தேர்வு, இரண்டாம்தாளில் ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளதற்கு, இந்திமொழி பேசும் மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் மட்டுமின்றி, அப்பகுதி எம்.பி.,க்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மாணவர்களை சமாதானம் செய்யும் வகையில், ஆங்கில மொழிப்புலமையை சோதிக்கும் கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டாது என்றும், 2011ல் தேர்வெழுதியவர்களுக்கு, மீண்டும், 2015ல் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும், மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு, இந்தி மொழி பேசும் வட மாநில மாணவர்கள் மட்டுமின்றி அப்பகுதி எம்.பி.,க்களை குளிர்வடையச் செய்தது. எனினும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, இந்தி மொழி பேசாத மாநில எம்.பி.,க்களை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த விவகாரம், பார்லிமென்டில் வேறு கோணத்தில் திசை திரும்பியுள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட, இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள், ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது, தங்கள் மாநில மொழிகளிலும் இடம் பெற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.மூன்று முறை ஒத்திவைப்புஇது தொடர்பாக, நேற்று ராஜ்ய சபாவில், காலையில் இருந்தே, அமளி துவங்கியதால், தொடர்ச்சியாக மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள் பலரும் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் பேசியதாவது: வினாத்தாள் முழுவதும் இந்தி மொழியில் இடம் பெற்ற போதிலும், எட்டு கேள்விகள் மட்டுமே,ஆங்கில மொழியில் கேட்கப்படுகின்றன.

இதையும் நீக்க வேண்டும் என்ற இந்தி மொழி பேசும் மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அப்படியானால், மற்றபிராந்திய மொழி பேசும் மாணவர்களின் நலனையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.இந்தி, ஆங்கில மொழிகளில் இடம் பெறுவதுபோல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் வினாத்தாள் இடம் பெற வேண்டும். இதன்மூலம், இந்தி மொழி பேசாதமாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் காக்கப்படும். மத்திய அரசு இதில் தலையிட்டு, உடனடியாக நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி.,க்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி