ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின், சிசாட் கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்பட மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில்,
அதையும் ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த, 26 நாட்களாக நடைபெற்று வரும் அந்த போராட்டத்திற்கு, நேற்று அரசியல் சாயம் பூசப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு, சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சிவில் சர்வீசஸ் தேர்வில் 2011ல் தான், சிசாட் கேள்வித்தாள் சேர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி