‘வானில் இரு நிலவு’ வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

‘வானில் இரு நிலவு’ வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்.


ஆகஸ்ட் 27-ம் தேதி வானில் இரண்டு நிலவுகள் தெரியும் என்று கூறப்படுவது வதந்தி. அதை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 27-ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதால், வானில் இரண்டு நிலவுகள் தெரிவது போல் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் செவ்வாய் கிரகம் ஒரு சிறிய ஒளி புள்ளியாகத்தான் தெரியும். செவ்வாய் நிலவு போல தெரியும் என்பது வதந்தியே. இவற்றை நம்ப வேண்டாம். உண்மையில் இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 5,57,63,108 கி.மீ. தூரத்தில் தெரியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி