கல்வித்திருநாளான ஆவணி அவிட்டம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

கல்வித்திருநாளான ஆவணி அவிட்டம் - தினமலர்

இன்று ஆவணி அவிட்டம். இது ஒரு கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.அவர் சொல்வதை கேளுங்கள்.
உபாகர்மம் என்றவுடன் ஆவணி அவிட்டம் ... அதாவது பூணூல் போட்டுக்கொள்ளும் நாள் என்பது தெரியும். இது ரிக் வேதிகளுக்கு சிரவண மாத திருவோண நட்சத்திரத்திலும் யஜூர் வேதிகளுக்கு சிரவண மாத பவுர்ணமியிலும் வரும். அதாவது ரிக் வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜூர் வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயி்க்கிறார்கள். அந்தக்காலத்தி்ல பெரும்பாலும் இரண்டும் .ஒரேநாளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கிரக்க கோளாறால் மாற்றம் ஏற்பட்டது.

உபாகர்மா என்றால் வேதக் கல்விதுவங்கும் நாள். அக்கால கல்வி்த்திட்டத்தில் முதல் ஐந்து மாதங்களை ஒரு பகுதியாகவும், அடுத்த ஏழு மாதங்கள் இன்னொரு பகுதியாகவும் பிரித்திருந்தனர். முதல் பகுதி உபாகர்மம், அடுத்த பகுதி உத்ஸர்ஜனம் எனப்பட்டது. இதற்கு விட்டு விடுவது என பொருள். அதாவது வேதக்கல்வியை முடித்து வேதத்தின் அங்கங்களான இலக்கணம், ஜோதிடம் உள்ளிட்டவை பற்றி படிப்பை துவங்கும்நாள். தை மாத பவுர்ணமி அல்லது அதற்கு முன்னதாக வரும் ரோகிணி நட்சத்திர நாளே உத்ஸர்ஜன நாளாக அமையும். இப்படியே மாறி, மாறி, 12 வருடங்கள் குரு குலத்தில் மாணவர்கள் படிப்பார்கள். வேதங்களை முழுமையாகப் படிக்க விரும்புவோர் 18 முதல் 36 வருடம் வரை படிப்பதுண்டு.

சரி ஆவணி அவிட்டம் என்பது ஆடியிலேயே வருகிறது! இதற்கென விளக்கம் என்ற சந்தேகம் உள்ளதல்லவா! இதற்கும் பதிலளி்க்கிறார் பெரியவர்.

ஆடி அமாவாசையில் இருந்து ஆவணி அமாவாசை வரை உள்ள காலமே சிரவண அல்லது சிராவணி மாதம். இதற்கு இடைப்பட்ட பவுர்ணமி வரும் காலத்திலேயே ஆவணி அவிட்டத்திற்கு நாள் குறிக்கப்படும்.சிராவணி என்றிருந்ததன் திரிபு தான் ஆவணி. எனவே ஆவணி மாத பவுர்ணமியன்று தான், ஆவணி அவிட்டம் வரும் என்று எண்ணத்தேவையில்லை.

இந்நதாளின் தாத்பர்யத்தை நமக்களி்தத மகாபெரியவரை குருவாக ஏற்று வணங்கி ஆவணி அவிட்டத்தை ஒரு கல்வித்திருநாளாகக் கொண்டாடி மகிழ்வோம்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி