உதவிப் பேராசிரியர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று நேர்காணல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

உதவிப் பேராசிரியர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று நேர்காணல்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணலுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வுவாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது.

முதல் கட்டமாக, கணிதப் பாடத்தில் விண்ணப்பித்துள்ளமாற்றுத்திறனாளிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். கணிதப் பாடத்தில் பிற விண்ணப்பதாரர்களுக்கும், பிற பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் விரைவில் அனுப்பப்படும். இந்தக் கடிதங்களில் நேர்காணலுக்கான நாள், இடம், நேரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த அழைப்புக் கடிதங்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தையும் பார்வையிட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி