தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்நியமனத்திற்கான நேர்முக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், இன்று துவங்குகிறது.அரசு கல்லூரிகளில், 1,063 உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததை அடுத்து, நேர்முக தேர்வு, இன்று,ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் துவங்குகிறது.இன்று, மாற்றுத்திறனாளிகள் அழைக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், தனித்தனியே, அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நேர்முக தேர்வு நடக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரம்,www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்' என, தெரிவித்துள்ளது.
This comment has been removed by the author.
ReplyDelete