'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை'


'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலைஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர்செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:

தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை.எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

90 சதவீதம் :

இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

13 comments:

  1. Replies
    1. மணி சார் உங்க ஊர்லயே கிடைச்சிடுச்சா ஜாலிதான்

      Delete
    2. Sir pls clear my doubt..... DEE IL select BT kku eppo counselling.... Newspaper confuse panranga

      Delete
    3. பார்ப்போம் sir. எங்கள் ஊரை சுற்றி சில காலிப் பணியிடங்கள் இருக்கிறது.ஆனால் இங்கேயே கிடைக்குமா என்று கலந்தாய்விற்கு சென்ற பிறகுதான் தெரியவரும்.

      Delete
    4. Mani sir neenga entha oor.... Naan Namakkal

      Delete
  2. Mani ayya pls help me? Enaku oru doubt? BV rank koduthuthan CV iku rank koduparkalamaa? Pls rply me?

    ReplyDelete
  3. ==========================
    MORE VACANCY IN THE
    FOLLOWING DISTRICTS ONLY !!
    ==========================

    14,700 இடங்களில், 90

    சதவீதத்திற்கும் அதிகமான

    காலியிடங்கள்,
    1). விழுப்புரம்,
    2). கடலூர்,
    3). திருவண்ணாமலை,
    4). வேலூர்,
    5). தருமபுரி உள்ளிட்ட,

    வட மாவட்டங்களில் தான் உள்ளன.

    ReplyDelete

  4. good morning mani arasan sir, ALL THE BEST TO GET JOB FOR UR OWN DISTRICT TO

    EXPAND SERVICE TO SATISFIED TEACHING PROFESSION TO UR OWN DISTRICT.,

    VALGHA VALAMUDAN., UNGAL TIRUMANATIRGU KALVISEITHI READERS - GALAIYUM

    ALAIYUNGAL., MANY TIME VERY NICE SERVICE FOR UR VALUABLE PARTICIPATION

    TO GUIDE MANY OP THE TET CANDIDATES., VERY CHEERFUL THANKS FOR

    UR SERVICE., BY., ALL TET CANDIDATES SARBAGA UNGALUKKU NANDRIYAI

    THERIVITHU KOLGIROM., MY DEAR FRIEND MR. MANIARASAN SIR.,
    MY MAIL ID: applered201230@yahoo.com

    ReplyDelete
  5. History Namakkal district bt vacancies anybody know means please publish.

    ReplyDelete
  6. Friends
    Please share the Sg vacancy in your district on tomorrow (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  7. தர்மபுரி மாவட்டம்பாலக்கோடு வட்டத்தில் பணி பெற விரும்புவோர் இடம் தொடர்பான தகவல்களுக்கு 8144228196 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி