மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால்,
உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்:
பள்ளி கல்வித்துறை சார்பில், 10 'மொபைல் கவுன்சிலிங்' வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில், ஒரு வாகனத்திற்கு ஒருவர் வீதம், 10 உளவியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இவர்கள், மாவட்ட வாரியாக, பள்ளிகளுக்கு சென்று, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், 'கவுன்சிலிங்' அளித்து வருகின்றனர். சிலமாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த, பள்ளி முதல்வர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், 'மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பள்ளிகளில், முக்கிய இடங்களில்,'கேமரா' பொருத்த வேண்டும்' என, பள்ளி முதல்வர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
By
P.Rajalingam...
Puliangudi..Tirunelveli
TNTET: ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரை கேட்டால் தெரியும்...!
ReplyDeleteகாலத்தின் மதிப்பு:-(
* ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
* ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற
ஒருவரை கேட்டால் தெரியும்...!
-->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! எங்களின் வாழ்க்கை...!!!
Thanks to Mr. jailani basha
எங்களை மறந்தது ஏன்? RAB-BAKSHA
ReplyDeleteநாங்களும் ஒரு ஆண்டாக முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி இறுதி பட்டியலுக்கு காத்து கொண்டு இருக்கிறோம்.தினமும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி மட்டுமே இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்தி
வெளியிடுகின்றன. எங்களை அனைவரும் மறந்தே விட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலுக்கு காத்து இருப்பவர்களை விட மிகவும் கொடுமையானது எங்கள் நிலைமை.
எங்களுடன் தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள் பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.
முதலில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி வந்தனர். இப்போது தான் வழக்குகள் முடிந்து விட்டது. தீர்ப்புகளும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
பின்னர் எதற்கு இந்த காலதாமதம்?
ஏன் எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்?
தமிழ் பாடத்திற்கு அவசரமாக இறுதி பட்டியல் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் இதுவரை வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு இறுதி பட்டியல் வெளியிட தயக்கம் காட்டி வருகிறது?
தமிழுக்கு மட்டும் பணிநியமனம் தர முடிவு செய்தவர்கள் எதற்கு மற்ற பாடங்களுக்கு தேர்வு வைத்தார்கள்?
பதில் சொல்ல வேண்டியவர்கள் "புராசஸ் கோயிங் ஆன்" என்கிறார்கள்.
என்று தான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ
Why only men are caught in sexual violence??
ReplyDeleteபாதிக்கப்பபடுவது பெண் இனம் மட்டுமே
DeletePg trb final list eppa varum?
ReplyDeleteIf girl misbehaves with male teacher, what is the legal action for that girl student??
ReplyDeleteTell me first that ?????
இங்கு ஆசிரியரும் மாணவ மாணவியரும் ஒன்றல்ல....
Deleteமாணவர்களுக்கு முன்னுதாரனமாக கருதப்படுபவர் ஆசிரியர்
மாணவர்கள் தவரிழைக்கும் போது அவர்களை நல்வழி(தண்டனையல்ல) படுத்துவது ஆசிரியரின் கடமை...
அதனால் தான்
"ஆசிரியர் பணியே அறப்பணி அதற்க்கே உன்னை அற்ப்பணி"
என்ற கருத்து உள்ளது.
ஆசிரிர்க்கான ஓழுங்கு நடவடிக்கைக்கு கல்வித்துறை எடுக்கும் நடவடிக்கை வரவேர்க்கத்தக்கது....
Oru teacherkum student kum vithyaasam illayaa.?...... panna thappukku thaane thandanai..... atha vittutu ponnu kooda thappu pandra nu pesurathu.....thappu....
Deleteஅறியா பருவம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உண்டு. அந்த அறியா பருவம் நிலையை எடுத்துரைத்து, அவர்களை நல்வழி படுத்துவது தான் ஆசிரியரின் தார்மீக பொறுப்பு. அதைவிட்டு விட்டு அவர்களின் அறியாமையை பயன்படுத்தி தவறு செய்யும் ஆசிரியர்களை தண்டிப்பது முறையே.
Deleteரோபோ பட வசனம் ரீ
ReplyDeleteமேக்.....
ரஜினி அம்மா : டி.ஆர்.பி
நாளைக்கு லிஸ்ட் விடு...
டி.ஆர்.பி : ஆப்ஸன்ட்
கேன்டிடேட்ஸ் CV லிஸ்ட்
விட்டாச்சி...டாட்...
ரஜினி : அம்மா அவங்க
கிட்ட செலக்ஸன்
லிஸ்ட்
விடுங்கனு தெளிவா
சொல்லனும்...
Jai sir call me sir . Maths bc more than 70 weight age how many people
ReplyDeleteவரவேற்க தகுந்த விஷயம்.
ReplyDeleteGood Evening madam.......
Deleteமாலை வணக்கம் அமுதன்
Deleteஉஷ்..... மேடம் நான் இப்ப காஸ்ட்யூம் மாத்தி போட்டுட்டு வந்திருக்கேன்... அதனால நீங்க என்னை DARK KNIGHT ன்னோ இல்ல BATMAN னோ கூப்பிடனும்..... உண்மைப் பேர் சொல்லி கூப்பிடப்படாது.......
Deleteஅப்புறம் நான் "அவர்கிட்ட" ப்ராது குடுத்துடுவேன்......
அவர்யார்னு கேட்ராதிங்க..... உஷ்..... ரகசியம்..... புதுசா ஒருத்தர் லென்ஸ்சோட கெளம்பிருக்காரு.......
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே, நீங்கள் மேலே கூறிய கிரேக்க மேதைகளைப் போல் தற்போதைய ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று கூறினால், கண்டிப்பாக உங்கள் மீதும் இச்சட்டம் பாயும். நீங்கள் கூறிய மேதைகளின் வரலாறுகளைச் சற்று ஆழமாகப் படியுங்கள், நான் கூறியது உங்களுக்குப் புரியும்.
Deleteநல்ஆசிரியராக
Deleteஆண் ஆசிரியர்களுக்கு,
ReplyDeleteமாணவியரிடம் பேசினால் பாலியல் வன்கொடுமை, பேசாவிட்டால் பாலியல் பாகுபாடு. நீங்கள் பாலியல் பாகுபாட்டாளராய் இருப்பது உங்களைப் பாதிக்காது, பாலியல் வன்கொடுமையாளராய் இருப்பது உங்கள் வேலைக்கு உலை வைக்கும்.
எளிய தீர்வு,
மாணவியரிடம் பேச்சைத் தவிருங்கள். மாணவியரிடம் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்பதற்கான அரசாணை இன்னும் வரவில்லை, ஆனால் உங்கள் பேச்சு பாலியல் வன்கொடுமையாக சம்பந்தப்பட்ட மாணவியால் உணரப்பட்டால் அது உங்களை பாலியல் வன்கொடுமையாளருக்கான அரசாணைப்படி தண்டனை பெற்றுத்தரும்.
உறுதியாக உங்களுக்குத் தெரியாத வரை மாணவியரிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
(குறிப்பு: ஆங்கிலத்தில் Black Humor என்றொரு பதமுண்டு.....)
மாணவியரிடம் பேசுவது எப்படிக் குற்றமாகும் என்று சிந்திப்பவர்களுக்கு, பேச்சில் இருந்தே அனைத்தும் துவங்குகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
Deleteகனேஷ் ஆறுமுகம் சார் உங்களது கருத்து மிக நன்று.....
Deleteபல மாணவியர்கள் ஆசிரியரை தகப்பன் என்ற இடத்தில் தான் வைத்துள்ளார்கள்...
நாமும் அவர்களை மகளாக நினைத்தால்...
மேற்கண்ட பிரச்சனைகள் வராது....
ஆசிரியர் மாணவர் நல்லுறவு ஏற்படும்...
மாணவிகள் ஆசிரியரை ஆசிரியராக மட்டும் நினைத்தால் போதுமானது, ஆசிரியர்களும் மாணவியரை மாணவியராக மட்டும் நினைத்தால் போதுமானது, தகப்பன்-மகள் உறவு எனும் எலெக்ட்ரா சிக்கல் வேண்டாமே!!!
Deleteஏனெனில் உறவு கொண்டாடுவது, உரிமைக்கு வழிவகுக்கிறது, உரிமை மனோபாவம் தவறிழைக்கும் போது கண்னை மறைக்கிறது. மாணவ, மாணவியர்களை உங்களுடையவர்களாய்ப் பார்க்காதீர்கள் (விலகி இருங்கள்), உங்களை அனுகிலாலொழிய ஆலோசனை சொல்லாதீர்கள், மாணவியர் என்றால் ஆசிரியைகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தன் பெண்ணுடன் வேறு எந்த ஆணும் சகஜமாக இருப்பதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பெற்றோர் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலனை செய்து பாருங்கள் (முதலில் ஒரு தகப்பனாக நீங்கள் அங்கீகரிப்பீர்களா என்பதைச் சீர்தூக்கிப் பாருங்கள்?)
Deleteநீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் நண்பரே....
Deleteதாய் தந்தை மகன் மகள் என மாணவ மாணவியர்களை நினைத்துக்கொண்டால் அங்கே தவறான எண்ணங்களுக்கு இடமில்லை என்பது என் கருத்து...
Gamesh arumugam sir neengal sonnadhu 1000%varaverka thakkadhu nichayam nam aasiriyaraka mattum irundhale podhum no problem. edhukku relation ellam it will create problems
Deleteஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே எவ்விதமான உறவுகளையும் கற்பிக்காதீர்கள், ஏனெனில் பெற்ற பெண்ணையே புணரும் தகப்பன்களும் இதே புண்ணிய பூமியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
DeleteBe clinical and practice absolute professionalism with your students.
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை...
Deleteதந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா...
முன்னொரு காலத்தில் தன் தந்தை ஆசானாகவும் மகன் மகள் மாணாககராக இருந்து படித்ததை அனைவரும் அறிவோம்...
சரி தவறு, நல்லது கெட்டது என்பது எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது...
ஒரு கல்லை கல்லாக பார்த்தால் கல்... அந்த கல்லை கடவுளாக பார்த்தால் கடவுளே.....
ஆறுமுகம் நண்பரே தங்களின் ஆரோக்கியமான கருத்து விவாதத்திற்கு மிக்க நன்றி.....
இந்த உலகில் ஒருவர், இருவர் தவறானவர்களைப் பார்த்து உலகில் உள்ள அனைவருமே தவறானவர்கள் என என்னுவது தப்பெண்ணமே....
Deleteநண்பரே கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களை பார்த்தால் சிலருக்கு தவறாக தோன்றும் பலருக்கு பக்தியாக தோன்றும்....
அதுபோலத்தான் எல்லாமே நம்முடைய பார்வையில் தான் உள்ளது நண்பரே...
நண்பரே, காலங்கள் மாறி வருகின்றன, தற்போதும் உங்களுக்கு சம்பளமில்லாமல் ஒரு தட்டில் பழங்களும், சில வஸ்திரங்களும் தந்தால் நீங்கள் கற்பிக்கத் தயாராக இருக்கிறீர்களா???
Deleteஅன்று ஆசிரியன் தேவைகள் குறைவானவனாக இருந்தான், கற்பது அனைவருக்குமான தொழிலாக இல்லை. இன்றைய கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளுக்குச் சமமானவை. ஒரு இனிப்பு தயாரிக்கும் தொழிற்கூடத்தின் பணியாளனுக்குப் பசியிருந்தாலும், அந்த இனிப்புக்கும் அவனுக்கும் இடையேயான உறவே தற்கால மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையில் உள்ளது அவ்வளவே.
நம்மைவிட நம் மாணாக்கர்கள் புத்திசாலிகள் என்பதைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு பின்தங்கிய மாணவனின் படிப்பில் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்றால் அது உங்களது பரோபகாரத்தைக் காட்டுவதாக மற்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது, நீங்கள் அதற்கும் சேர்த்துத்தான் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதுதான் உங்கள் நினைவுக்கு வரவேண்டும்.
நண்பரே தனியார் பள்ளிகளில் சொற்பமான ஊதியத்தை பெற்றுக்கொண்டும் தன்னுடைய மாணாக்கர சிற்பமாக செதுக்கும் பல நல்ல ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்....
Deleteபல நல்ல ஆசிரியர்களை தாங்கள் மறந்து விட்டீரா????
ஆசிரியர் மாணவ உறவே பள்ளியில் சிறந்ததாக நான் கருதுகிறேன் ராஜலிங்கம் நண்பரே. குடும்ப உறவுகளை பள்ளியில் தேட வேண்டாம் அதை நம் வீட்டிலே காணலாம்
DeleteMr rajalingam neegal solvadhu mutrilum thavaru indhakalathil than an an maganai than maganaka parkamattarkal adhu mudiyadhu. Appati yirukka matroruvar pennai eppadi ungal pennaga neengal par peer unarvugal differs from blood relatives to other relation it is mentolity, psychology.
ReplyDeleteஇந்த உலகில் ஒருவர்,இருவர் தவறானவர்களைப் பார்த்து உலகில் உள்ள அனைவருமே தவறானவர்கள் என என்னுவது தப்பெண்ணமே....
Deleteநண்பரே கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களை பார்த்தால் சிலருக்கு தவறாக தோன்றும் பலருக்கு பக்தியாக தோன்றும்....
அதுபோலத்தான் எல்லாமே நம்முடைய பார்வையில் தான் உள்ளது நண்பரே...
வரவேற்க தகுந்த விஷயம்.,
ReplyDeleteKarpikkum Kadamayai mattum sarivara seithuvittu vilagi iruthale
ReplyDeletenandru...
Matha, Bitha, Guru, Theivam. Guru thanakana idathil iruthale saala sirandathu
ReplyDelete