ஈகோ பிரச்னையால் மேம்பாட்டு பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

ஈகோ பிரச்னையால் மேம்பாட்டு பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்.


திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டுபயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. நேற்று இரண்டாம் நாள் பயிற்சிக்கு, 90க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளிஆசிரியர்கள், பள்ளியில் உள்ள வட்டார வள மையத்திற்கு சென்றனர்.திருவேங்கடம் என்ற துவக்கப்பள்ளி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கான பைக் ஸ்டாண்டில், தனது பைக்கை நிறுத்தினார். மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர், வழக்கமான பைக் ஸ்டாண்டில், தனது மொபெட்டை நிறுத்தினார். அப்போது, துவக்கப்பள்ளி ஆசிரியரின் பைக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.அதைப் பார்த்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை அனுப்பி கீழே விழுந்த பைக்கை எடுத்து நிறுத்தினர். அதில், பைக்கின் சைடு கண்ணாடி உடைந்து விட்டது. இதையறிந்த துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சிவகுப்பு துவங்கும் நிலையில், அந்த வகுப்பை அப்படியே புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.பள்ளி வளாகத்தில், 90 துவக்கப்பள்ளி ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை ஈகோவாக மாறியது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சிவகாமி, தலைமையாசிரியர் லோகநாதன் ஆகியோர் புறக்கணிப்பு தொடர்பாக, இருதரப்பு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர்.டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., ஆகியோர் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர். புறக்கணிக்கப்பட்ட வகுப்பு, கூடுதல் சி.இ.ஓ., உத்தரவுக்கு பின், பின்னர் நடத்தப்படும். ஆசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிவகுப்பை புறக்கணித்தனர் என உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி