அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது: செல்லூர் கே. ராஜூ ---------தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது: செல்லூர் கே. ராஜூ ---------தினமணி

பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சிறப்புத் திட்டங்களின் வாயிலாக, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார்.


மதுரை திருநகர் சவிதாபாய் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அவர் பேசியது:

டந்த 3 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் 53 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொருளாதார நிலை மாணவர்களின் கல்விக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக, மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, நோட்டுப் புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி, கற்றல் உபகரணங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மதுரை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம். முத்துராமலிங்கம், துணை மேயர் கு.திரவியம், பள்ளித் தாளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எம். சீனிவேல், முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ. ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

2 comments:

  1. ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை.

    அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ்பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை,நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என,தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

    ஆங்கிலத்திற்கு அதிகம் :

    ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தமிழ் பாடத்திற்கு மட்டும், பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு, தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசியல் தலைவர்கள், தமிழ் தமிழ் என, மூச்சுக்கு, முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை, இது தான். தமிழ் பாடத்தில், 9,500 பேர் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்றபோதும், 772 பேருக்கு தான், வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்மற்ற பாடங்களுக்கு இணையாக, தமிழ் பாடத்திற்கும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில், தமிழ் பாடத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  2. தமிழ் என்றால் என்ன
    TRB மொழி நான் சொல்கிறேன் உயிர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி