அனைத்துப் பள்ளிகளையும் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் பங்கேற்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பணி நியமனம் செல்லாது என்ற ஐகோர்ட் உத்தரவிற்கு, சுப்ரீம் இடைக்காலத் தடை விதித்தது.இதனை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் 50 பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் பங்கேற்கத் தடை விதிக்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி