ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு.


ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது.
இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம். இவர், 'நாகர்கோவில்பஸ் ஸ்டாண்டில் இருந்த பிளஸ் 2 மாணவர்களை, கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போராட்டத்தை தூண்டினார்,' எனக்கூறி, கன்னியாகுமரி கலெக்டர் 2013ல் 'சஸ்பெண்ட்' செய்தார்.இதை எதிர்த்து ரசாலம்,' என் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. கலெக்டர் தரப்பில், 'தேர்வுசமயத்தில் மாணவர்களை படிக்கவிடாமல், கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தார்.இது நன்னடத்தையை மீறிய செயல்,' என வலியுறுத்தப்பட்டது.நீதிபதி: கலெக்டர் தான் மாவட்டத்திற்கு தலைவர். அனைத்துத் துறைகளுக்கும் பொறுப்பானவர்.

பொதுத் தேர்வு துவங்க 5 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு, மனுதாரர் அழைத்து வந்தது நன்னடத்தையை மீறிய செயல். இது பற்றி, குழந்தைகள் நலக்குழு, நேசமணி நகர் போலீசில் புகார் செய்துள்ளது.மனுதாரர் மீது கலெக்டர் முதலில் நடவடிக்கை எடுத்தாலும், பின் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் தவறு காண முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.

1 comment:

  1. An Useful kalviseithi website comment

    ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222

    வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354

    வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    வழக்கறிஞர் திரு நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி