இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி செய்யும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி செய்யும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு

சப்பாத்தி செய்யும் ரோபோவை இந்திய தம்பதியினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சப்பாத்தி செய்யும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். தம்பதியினர் இந்த ரோபோவை வடிவமைக்க 6 வருடங்கள் கடினமாக உழைத்துள்ளனர். 6 வருட கடின் முயற்சியின் பலனாக 'ரோடிமேடிக்' என்ற சப்பாத்தி செய்யும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ இன்னும் விற்பனைக்கு வராத வில்லை. ஆனால் அமெரிக்காவில் ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்களது கண்டுபிடிப்புக்கு அமெரிக்க சான்று வழங்கியுள்ளது.




சப்பாத்தியின் சுற்றளவு, தடிமம், மென்மை என அனைத்தையும் இந்த ரோபோவில் உள்ளிட்டு செய்துவிடலாம். ஒரு நிமிடத்திற்குள் சுமார் ஒரு சுட்ட சப்பாத்தியை ரோபாவால் தயாரிக்க முடியும். சமையலறை சாதனத்திற்கு ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதும், அமெரிக்கா சான்று வழங்கியதும் இதுவே முதல் முறையாகும். அடுத்த வருடம் அமெரிக்காவில் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோ விற்பனைக்கு வருகிறது. இந்த சப்பாத்தி செய்யும் ரோபோவின் விலை ரூ. 36,752 ஆகும். இந்த ரோபோவை மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும் என்றும் சுத்தம் செய்ய முடியும் என்றும் இஸ்ரானி தெரிவித்துள்ளார். இஸ்ரானி ஒரு தொழில் அதிபரும், டென்குப் முன்னாள் நிறுவனர் ஆவார்.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி