இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2014

இரு இந்திய அமெரிக்கர்களுக்கு உலகின் உயரிய கணித விருது

இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இருவருக்கு, உலகின் மிக உயரிய கணிதவியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

'கணித நோபல் பரிசு' என வர்ணிக்கப்படும், 'பீல்ட்ஸ் மெடல்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஞ்சுள் பார்கவா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மற்றொரு இந்திய வம்சாவளியினரான, சுபாஷ் கோட் என்பவர், சர்வதேச கணிதவியல் அமைப்பின், 'ரோல்ப் நெவல்லின்னா பரிசு'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                                           


 இவர், நியூயார்க் பல்கலைக் கழகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மேலும், ஈரான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியை, மரியம் மர்சாகானிக்கும், பீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் ஈரான் பெண் இவர் தான்.இவர்களுக்கு, தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற, சர்வதேச கணிதவியல் மாநாட்டில், விருதுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி