ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்-Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2014

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்-Dinakaran News


ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா 5 பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. திட்டத்தை விரிவிப்படுத்த தொடக்கப் பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி திட்டம் கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளிலும் துவங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்உள்ளன. கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 249 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 5,201 மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 92 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டது. இதில் 5,835 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். கோவையில் ஆங்கில வழிக்கல்வியில் கடந்த 2 ஆண்டுகளை விட, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு இதுவரை தனி ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. இதனால், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களே, கூடுதலாக ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

தமிழ்பாடம் நீங்கலாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை தமிழ்வழி, ஆங்கிலவழி என மாறி, மாறி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், 2 பிரிவிலும் முழுமையாக வகுப்புகள் நடத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6, 7 வகுப்புகளில் சில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் போதிய அனுபவம் இல்லாததால் ஆங்கில வழிக்கல்வி நடுநிலைப்பள்ளிகளில் தடுமாறுகிறது.பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கிலப் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு உதவுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இப்பயிற்சியினால், ஆசிரியர்களுக்கு ஆங்கில புலமை ஏற்படுவதில்லை என ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வி முழுமையாகசென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை சரிசெய்ய ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனி ஆசிரியர்கள் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என கல்விச்சங்கங்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கூறுகையில்,“ ஆங்கிலவழிக் கல்விக்கு தமிழக அரசு போதிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் 6, 7 வகுப்புகளில் உள்ள புத்தகத்தில் புதிய வார்த்தைகளால் ஆசிரியர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களுக்கு எடுத்து செல்ல முடிவதில்லை. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில பயிற்சியும் காலதாமதமாகிறது. இதனை தவிர்க்க, ஆங்கிலம் படித்த தனி பட்டதாரி ஆசிரியர்களை தமிழகஅரசு நியமிக்கவேண்டும்“, என்றார்.

38 comments:

  1. மதிப்பிற்கூறிய
    திரு விஜயகுமார், திரு.ராஜலிங்கம்.,
    திரு.ஸ்ரீ,
    திரு.மணியரசன்
    மற்றும் பலர் இங்கே பல்வேறு கருத்துக்களை கூறிய அனைவரும் எங்கே எங்கள் கதறல்கள் உங்களுக்கு கேட்கவில்லையா அல்லது கேட்டும் கண்டுகொல்லாமல் இருக்கின்றீர்களா ? 2ஆவது பட்டியல் பற்றி ஏதேனும் தகவல் தாருங்கள் .எங்களுக்காக குரல் கொடுப்பதாலோ அல்லது நாங்கள் வழக்கு தொடர்ந்தால் உங்களின் பணி வாய்ப்பு பறி போய்விடும் என்று நினைக்கிறீர்களா ? அப்படி ஏதும் நடக்க வாய்பில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே ஆயினும் 5% தளர்வினால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் எங்களால் பணிக்கு செல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது தற்கொலை செய்து கொல்லலாம் போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, உறுதியாக 2ம் தேர்வு பட்டியல் வரும். மனம் தளர வேண்டாம். தேர்வாகதவர்களின் மனநிலை அனைவர்க்கும் புரியும். எத்தகைய ஆறுதலும், யாருடைய ஆறுதலும், உங்களது மன கஷ்டத்தை போக்க முடியாது. உங்களை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாத காரணத்தாலேயே தேர்வான அனைவரும் அமைதியாக உள்ளனர். மேலும் அவர்கள் என்ன கூறினாலும் உங்களுக்கு "இவர்கள் தேர்வாகியதால் இப்படி கூறுகிறார்கள் என என்ன தோன்றும் ",அதனாலேயே அனைவரும் அமைதியாக உள்ளனர். எனவே அவர்களை சுயநலவாதிகள் என நினைக்காதீர். உங்கள் பதிவை பார்த்து மனம் தாங்காமல் பதில் அளித்தேன் .ஏதேனும் உங்கள் மனம் புண் படும் படி கூறி இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    2. Bio zoology Sir,

      If you don't mind , your mail id please

      Delete
    3. Dear TRB RASIGAN,
      Don't worry we are with you.
      Wait and see.

      Delete
    4. Hello Mr.Vijayakumar !!! Do you know how many vacancies for paper 1???

      Delete
    5. டிஆர்பி ரசிகன்August 13, 2014 at 1:19 PM சார்...

      நீங்க என்னிடம் சில கேள்விகள் கேட்டதாக நண்பர் ஒருவர் தொலைபேசியில் சொன்னவுடந்தான் நான் உங்கள் கேள்விகளை பார்த்தேன்...

      அதற்க்கு முன் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்டக்க விரும்புகிறேன்..

      நீங்கள் உங்கள் சகோதரர் அல்லது நெருங்கியவர் யாரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போதும் இங்கு வந்து பதிலளித்துக்கொண்டிருப்பீர்களா?.. அப்படி கொடுப்பேன் என்று நீங்கள் சொன்னால்.. என்னுடைய பதில் உறுதியாக இல்லை என்பதே.. நான் அந்தளவு பொது நலவாதியில்லை எனக்கு என்னுடைய குடும்பம் மீதும் அக்கறை உள்ளது..

      எனக்கு தேர்வு பட்டியலில் இடம் கிடைத்து விட்டதால் ஏதோ நீங்கள் வழக்கு போட்டால் எனக்கு வேலை கிடைக்காமல் போய் விடும் என்று நினைத்தால்... நினைத்துக்கொள்ளுங்கள்.. அதை பற்றி கவலை இல்லை... இப்படி பலர் நினைக்கலாம்.. எனக்கு இப்போது தேர்வுப்பட்டியலில் இடம் கிடைத்துவிட்டதால் நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு தவறாக தான் தெரியும்.. வழக்கு போடுங்கள் என்றோ அல்லது போட வேண்டாம் என்றோ நான் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? இல்லை எனக்கு வேலை வேண்டாம் தேர்வு பட்டியலிலிருந்து என்னை நீக்கிவிடுங்கள் என்று சொல்லவேண்டுமென்று நீங்கள் நினைகின்றீர்களா?

      இல்லை உங்களது பிரச்சினைக்காக நான் நீங்கள் போராட மாட்டேன் .. எனக்காக ஸ்ரீ, மணி, விஜய் சார் இவர்களெல்லாம் வந்து போராட வேண்டுமென்று நினைகிறீர்களா? இதில் நான் சுயநலவாதி.. என்றால் அப்படியே இருக்கட்டும்..நல்லது.. நீங்கள் மிக்க பொதுநலத்துடனே இருங்கள்...

      உங்களுடைய கேள்விக்கான பதிலாக இதை எடுத்துக்கொண்டாலும் சரி.. இல்லை எதிர் கேள்வியாக இதை எடுத்துக்கொண்டாலும் சரி...

      Delete
  2. irandaavathu pattiyal veliyiduvaargala

    ReplyDelete
  3. very very good appadi thani teacher niyamicha vacancy athigamagum...tet pass senja ellarkum job kidaikum...AMMA manasu vatcha than ethuvum nadakum

    ReplyDelete
  4. sir appointment order postalail anuppuvaargal endru solgiraargal unmaiya
    case irukkum pothu eappadi anuppuvaargal
    kaalai kathir peper 12/08/2014 news endru solkiraargal unmaiya

    ReplyDelete
  5. Tamil teachers note tis point.tet la 90mel eduthavanga mattumey.ippothu select aki irukaanga(bc).naan check panniten.last ah tet mark94.avanga ellam schoola 90percen ug also 65 so dont feel.scnd unmaiya iruntha namakku vaippu iruku.but evalavu entru theriyala

    ReplyDelete
    Replies
    1. hi kalai sc/ tamil major/ 64.29/ last cut off 65.33 so enaku chance irukuma plz tel

      Delete
  6. pratap how many persons r between 63 and 65 cut off in English?

    ReplyDelete
  7. what is DEE ? THE SELECTION LIST IS PUBLISHED UNDER IT? WHAT DOES IT MEAN?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Departmant of Elementary Education
      தொடக்க கல்வி துறை

      Delete
  8. kalai plz tel sc/ tamil major/ 64.29/ last cut off 65.33 so next chance 2 nd'la irukuma pl tel

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அன்பான கல்வி செய்தி நண்பர்களே
    நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  11. Thambi dhayanithi high court vanthu paaru tet 100mark u mela eduthu vela illama ethanaper thervula inkkromnu theriyum

    ReplyDelete
    Replies
    1. நானும் 98 மதிப்பெண் பெற்று தேர்வாகவில்லை காரணம் நான். 12 ம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை U.G. ல் correspond ல் படித்தேன் அதனால் எனக்கு weightage குறைந்தது எல்லாம் எனது தவறு. ஏனெனில் கல்லூரிக்கு regular ல் படிப்பவர்கள் நிறைய தெரியம் நாம் தேர்வு நாள் அன்று தான் புத்தகம் தேடி எடுத்து படித்தேன் அவை முடிந்த கதை இனி என்ன செய்வது நாம் யாரும் எதிர்பார்காத வண்ணம் மதிப்பெண்க்கு weightage கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு உண்மை சொல்கிறேன் நாம் 8 மாதம் வீணாக நேரம் வீண்டிப்பதை விட்டு விட்டு படித்து இருந்தால் கண்டிப்பாக அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று இருக்கலாம் எனவே நான் அடுத்து TET க்கு நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறவேண்டும் அதுவே எனது லட்சியம் உண்மையாக இந்த selection list ல select ஆகாத்தது எனக்கு ரொம்ப வேதனை எனவே அடுத்து வரும் தேர்வுக்கு தயாராவதுதான் நல்லது ஏனெனில் நானும் வழக்கு தொடரலாம் ஒரு நீதிபதி கூறிய scientific formula வை எதிர்த்து நமது வழக்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை வீணாக நேரம் வீணடிக்க விரும்பவில்லை படிக்க தயாராக உள்ளேன் இது எனது கருத்து தவறாக உங்கள் மனம் புண்படுத்தும் படி கூறியிருந்தால் மன்னிக்கவும்.. நன்றி

      Delete
    2. உங்கள் விருப்பம் படி வழக்கு தொடருங்கள் அதுவே எனது விருப்பம் வெற்றி பெற்றால் எனது முதல் வாழ்த்து உங்களுக்கு

      Delete
    3. Niraya therinthvargal yen tet la mark edukkalai naangalum regular than mothalla unga age ennanu solluppa

      Delete
    4. 25 my date of birth 29.4.1990

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. உண்மையாகவே TET ல் இடம்பெறாத்து மிகுந்த வருத்தம் இதற்கு யாரும் ஆறுதல் சொல்ல முடியாது. அதற்காக நாம் இப்படியே இருந்தால் தீர்வு வந்து விடுமா?
      "தோல்விக்கு காரணம் செல்பவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர்;
      தோல்விக்கு வழிகளை தேடுபவர்கள் வெற்றி பெறுகின்றனர்"
      நான் படித்து வெற்றி பெற வழிகளை கண்டுவிட்டேன்.
      நீங்கள் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்து...

      நன்றி நண்பர்களே

      Delete
    7. தயவுசெய்து உங்களை புண்படுத்த கூறவில்லை. நாம தான் நீதிமன்றம் சொல்வதை கேட்க வேண்டும் நீதிமன்றத்திற்கு நாம் சொல்ல தேவை இல்லை வேண்டும் எனில் நமது வருத்தம் தெரிவிக்கலாம் அதன் பின நீதிபதிதான் நமக்கு order போடவேண்டும். G.O 71 வருவதற்கு காரணம் நாம்தான் இப்போது அதை ரத்து செய் என வழக்கு தொடர்வதும் நாமதான். மதிப்பிற்கு உரிய நீதிபதிகள் அனைவரும் பயனடையும் வண்ணம் மிக சிறந்த தீர்ப்புதான் வழங்குவார்கள். சரி நீங்கள் எனது தோழர்கள் என்ற உணர்வோடு இங்கு எனது கருத்தை பதிவு செய்தேன் எனது செய்தி யாரையும் புண்படுத்த கூறவில்லை
      எனது தேர்வு தோல்விகள்
      1.police ல் 1 மதிப்பெண் ல் முதல் தோல்வி
      2. VAO. ல் 1 மதிப்பெண் ல் தோல்வி
      3.group 4 ல் 3 மதிப்பெண்ல் தோல்வி.
      4. தற்போது TET ல் 0.56 ல. தோல்வி
      அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவேன் இதவே எனது லட்சியம்.
      தேவையில்லாமல் இங்கு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை நான் படிக்க போறேன்.. இப்படியே எனது 8மாதம் வீணாக போய்விட்ட

      Delete
  12. கல்வி, யோகா, முதலுதவி, மருத்துவம், தியானம்,TNPSC, செல்போன், கணிப்பொறி above d All details @ http://dictionary4life.blogspot.in

    ReplyDelete
  13. Vijaya kumar chennai sir my friend selected in both tet and pg. முதலில் pg பணியில் சேர்ந்து விட்டு பின்னர் tet counselling ல கலந்து கொள்ளலாமா? இல்லை job resign செய்து விட்டு தான் இங்கு வரமுடியுமா. Clear my doubt.

    ReplyDelete
  14. தஞ்சையில் நடைபெற்ற தமிழக அரசை ஈர்கும் ஆர்பாட்டத்தை சன் டிவி 3 மணி தலைப்பு செய்திகளில் ஒளிபரப்பியதற்கு b.ed கணினி ஆசிரியர்கள் சார்பாக சன் டிவிற்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. please tell your friends whoever is in chennai/vellore/around city/possible candiataes to attend giving petition and taking further action we wish you all to attend meeting in trb pls cantact paramananthan krishnagiri 9842874329 vellore muniyasamy 9940242636

    ReplyDelete
  17. Hello dayanithi tiger
    give your no.nenga pudukottai thane.nanun m.r.m la b.ed padi chennai. Give your no

    ReplyDelete
  18. நண்பர்களே கடந்த 2013 tet exam இல் பாஸ் ஆனவவார்களில் சிலர் போஸ்டிங்க்கு தேர்வாகி உள்ளனர், ஆனால் பலர் போஸ்டிங்க்கு தேர்வாகாமல் உள்ளனர்.எனவே மீதி உள்ள tet pass நபர்களுக்கு வேலை கொடுத்த பின்தான் அரசு அடுத்த tet அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் எப்பொழுதும் இவர்களுக்கு வேலை கிடைக்காது.ஏனெனில் இவர்கள் தற்போதுள்ள வெய்டேஜ் முறை படி தங்களது 12,b.ed,d.ted.மதிப்பெண்களை மாற்ற இயலாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி