''சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிரச்னையில், தமிழக அரசின் அணுகுமுறை என்ன?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.தமிழகத்தில், 68 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டரை லட்சம் பேரில், 40 ஆயிரம் காலி பணி இடங்களும் உள்ளன.
தனி துறை வேண்டும்
கடந்த மூன்றாண்டுகளாக, இந்த காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக, ஒரு சத்துணவு அமைப்பாளர், ஐந்துக்கும் மேற்பட்ட மையங்களை, கண்காணிக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிறார். எனவே, உடனடியாக காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், சத்துணவு திட்டத்துக்கு தனித் துறை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இந்த மையங்களை தனியாருக்கு, சில இடங்களில் தாரை வார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிக் காலத்தில், மறைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சட்டப்பூர்வமான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் முன் வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காப்பாற்றினார்களா? அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்னைகள்,முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என, அறிவித்தார்களே, அதையாவது காப்பாற்றினார்களா? தற்போது அதிகாரிகளின் மூலமாக போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், முன் அறிவிப்பின்றி, தலைமையிடத்தை விட்டுச் செல்லும் பணியாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
அருமை.! ஒடுக்கப் பட்டோரின் சார்பில் என்றும் குரல் கொடுக்க ஒரு ஜீவன் இருக்கிறதே.வாழிய பல்லாண்டு !
ReplyDeleteஅப்படியே ஆசிரியர் நியமனத்தில்
ReplyDeleteதற்போதைய அரசின் அணுகுமுறை என்ன என்பதை அனைத்து கட்சித்தலைவர்களும் கேள்வி எழப்பினால் நன்றாக இ௫க்கும்.
அரசானை எண்:71 ன் படி
மூத்த ஆசிரியர்களின் அரசுப்பணி கனவை தவிடுபொடியாக்கி
விட்டார்கள்.
இப்போது மட்டும்மல்ல இனி எப்போதுமே அரசானை எண்:71 யால் மூத்த ஆசிரியர்களுக்கு அரசுப்பணி கிடைப்பது பகல் கனவே...
TET ARTICLE : மூத்த ஆசிரியர்களை பலிகெடா ஆக்கும் அரசானை எண் : 71
ReplyDeleteதற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும்முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த அரசாணைபடி
தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு15மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவழங்கப்படுகிறது. இந்த அரசானை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம்வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்குசெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சனை:-
ஆசிரியர் தகுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கொடுப்பது என்பது சரியான முறை. ஏனெனில் இந்த தேர்வு அனைவராலும் ஒரேநேரத்தில்., ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு எழுதப்பட்ட பொதுவான தேர்வுஆகும்.+2 க்கு வெயிட்டேஜ் மிதிப்பெண் கொடுப்பது என்பது மிகவும் தவறான முறை.ஏனெனில் +2 படிப்பை ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டங்களிலும், பல விதமானபாடபிரிவுகளிலும், பல விதமான பள்ளிகளிலும் பயில்கின்றனர். இங்கு ஒக்கேசனல்பாடபிரிவில் செய்முறைக்கு 450 மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில்MATRIC பள்ளி, CBSE பள்ளி, INTERNATIONAL பள்ளி என்று பல்வேறு விதமானபள்ளிகளில் பயில்கின்றனர். மேலும் பள்ளிகளில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசுஉதவி பெறும் பள்ளிகள் மற்றும் etc என்று பல விதமான பள்ளிகளில் பயில்கின்றனர்.இதில் எங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதுஎல்லோருக்கும் தெரியும். இவ்வளவு முரண்பாடுகளை கொண்ட படிப்பை அனைவரும் சமம்என்று கூறுவது மிகவும் தவறானது.
மேலும் பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்பிலும் பல்வேறு விதமானமுரண்பாடுகள் உள்ளது. இதிலும் படித்த காலங்கள், படித்த கல்லூரிகள், படித்தபாடம் மற்றும் தேர்வு முறை முற்றிலும் வேறுபடுகிறது. கல்லூரிகள் என்றுபார்த்தால் தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும்நிகர்நிலை பல்கலை என்று பல உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு இன்டர்னல்மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் இன்று 25 மதிப்பெண் இன்டர்னல்வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணே மூன்று வருடத்திற்கு 750 க்கு மேல்கிடைக்கிறது. இன்றைய சூல்நிலையில் நிறைய வசதிகளுடன் கூடிய தனியார் கல்லூரிகள்அதிகம். படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றால் அடுத்தமுறை தகுதிதேர்வு எழுதி அதன்மதிப்பெண்ணை அதிகபடுத்த முடியும். ஆனால் எனது +2, UG, B.ED மதிப்பெண் என்பதுநிரந்தரமானது. அதை எப்படி என்னால் அதிகப்படுத்த முடியும். எப்படி பார்த்தாலும்எனது பணி வாய்ப்பு என்பதே எதிர்காலத்தில் இல்லை என்ற சூல்நிலைக்குதள்ளப்படுகிறோம்.
பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் மதிப்பென் வழங்காதது மிகபெரிய ஏமாற்றமாக உள்ளது. ஏன் பணி அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள் கிடையாதா? எந்த தனியார் பள்ளிக்கு வேலைக்குசென்றாலும் பணி அனுபவம் உண்டா என்று தான் முதலில் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும்ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் எம்பிளாய்மென்ட் ல் பதிவு செய்கிறார்கள்.எதற்காக வயதுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இங்குசீனியாரிட்டிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படவில்லை.
நமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் பல விதமாக உள்ளதால் தான் பொதுவானதேர்வு முறையே வந்தது. அந்த பொதுவான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்துஆசிரியர்களை தேர்வு செய்தால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.மேலும் சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
அரசானை எண் 71 ன் படி ஆசிரியர்ககளை தேர்வு செய்தால் தனியார் பள்ளியில்பயின்று, தனியார் கல்லூரியில் பட்ட மற்றும் பட்டய படிப்பை முடித்தவர்கள்மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். எங்கு அதிக மதிப்பெண் பெறப்படுகிறது என்பதுஊர் அறிந்த உண்மை. ஏன் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழைகிராமப்புற மாணவர்கள் யாரும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என நினைக்ககூடாதா?கல்லூரி படிப்புகளின் மதிப்பெண்கள் அரசு வேலைக்கு செல்லும் போதுஎடுத்துகொள்வது முன்னவே தெரிந்து இருந்தால் நாங்களும் ஒவ்வொரு தேர்வின்முக்கியத்துவம் கருதி படித்து இருப்போம். கஷ்டப்பட்டு படித்து தகுதி தேர்வில்அதிக மதிப்பெண் பெற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தகுதி தேர்விலே குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு வேலைகேட்கவில்லை. அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு பரிக்கப்படுவாதால் தான் எங்கள்உரிமைகளை கேட்கிறோம்.