முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது- Tamilmurasu - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது- Tamilmurasu




முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், உடனடியாக விடுவித்தனர்.

இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்திக்கப்போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர்வசித்து வரும் போயஸ் கார்டன், முதல்வர் தலைமை செயலகம் செல்லும் பாதை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல்வர் வீட்டை முற்றுகையிட போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அண்ணா சதுக்கம் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அதேபோல் 50க்கும் மேற்பட்டோர் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஒன்று கூடி புறப்பட்டனர். அவர்களையும் மெரினா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை நீக்காவிட்டால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் எந்த காலத்திலும் பணி நியமனம் பெறமுடியாத நிலை ஏற்படும். எங்களின் இந்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கைஎடுக்காவிட்டால், டிஇடி முடித்த 62,500 பேர் தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றனர்.

20 comments:

  1. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.,கல்விச்செய்தியில் Comments box என்பது நமதுஆக்கப்பூர்வமான.,ஆரோக்கியமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதனை ஒரு சிலர் நாம் ஆசிரியர்கள் என்பதனை மறந்து தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்க்கும் வலைதளத்தில் நமக்கே இந்த பகுதி உரியது என்ற நோக்கில் நாகரிகமற்ற கருத்துகளை வெளியிடுகின்றனர்.இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள்.அது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளும் செயல் ஆகும்.கல்விச்செய்தி வாசகர்கள் அனைவரும் தரமானவர்களே என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள்.கல்விச்செய்தி என்றும் நடுநிலையுடன் செயல்படும் இணையதளம் என்பதனை மீண்டும் உங்களுக்கு கூறுகின்றோம்.ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.-அன்புடன் கல்விச்செய்தி

    ReplyDelete
    Replies
    1. Hi sir... Thank you.... for your useful information...

      Delete
  2. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete
    Replies
    1. Dear frds
      Only solution TET mark percentage to be increased from 60% to 85% then all above 90 will get job

      Delete
  3. Paper 1 above 74(bc) call me
    95433 91234....

    ReplyDelete
  4. dear friends
    1. there is no 300 people only 30 peoples protesting
    2. rajalingam is not a teacher, he s a fraud broker
    3.satish, anbu all are rajalingam supporters getting money from sm political parties
    4.case is in court so we had to wait
    5. fir will be file against rajalingam, satish
    6. all are selfish people
    6. at any cost govt cant give job to 72000 peoples
    7.these people speaking against govt and CM, which is legally wrong
    8.their motive is to create kallavaram, which will stop us getting job
    9.calling other peoples only for their safety, not for good cause
    10.they cant give assure for all 72000 people for job
    11. dont give ur no to any of these guys, because when investigation statts u will be in trouble.
    12. be safe and protest in a democratic way.

    ReplyDelete
  5. நன்றி நாவடக்கம் வேண்டும்

    ReplyDelete
  6. Our Honorable CM is doing best things for us............

    ReplyDelete
  7. .

    தெ௫வுக்கு தெ௫ மதுபானக்கடைகளை
    திறக்கும் அரசு
    ஆசிரியர் நியமன பிரச்சனையை 1 வ௫டமாக கண்டுகொள்ளாதது ஏனோ ?

    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
    இப்போது எங்கள் பிரச்சனையில்
    நியாமாக ஏதேனும்
    செய்வீர்களா ?

    வாங்கு வங்கி அரசியலுக்காக
    2014 MP தேர்தலை மனதில்கொண்டு
    6 மாதம்
    முனபே முடிந்த Tet தேர்வுக்கு  5%      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
    வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
    Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்

    உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
    மீது அக்கறையி௫ந்தால்
    காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
    2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
    அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
    அப்போது எந்த தேர்தலும் இல்லை.

    இவர்கள் கூற்றுபடி 2012ல்
    TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
    எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
    காரணம் தேர்தல் நேரம்.

    இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
    பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
    இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

    நாங்கள்
    தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை
    B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
    TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
    இல்லை
    உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

    தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
    சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
    போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
    ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
    போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90
    மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
    அதை மீட்டெடுக்கும் நேரமீது.

    Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம். 

    இவ் அறவழிபோரட்டம் பற்றிய
    செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Message மெசேஸ்
    Facebook
    Twitter
    YouTube
    What's app போன்ற சமூக தளங்களில்
    பகி௫ங்கள்
    .
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்

    நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
    நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
    சென்னைக்கு....
    புதியதொர் விதியைப்படைப்போம்
    தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

    உங்களுக்கு தேவைப்பட்டால்
    இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

    P.Rajalingam Puliangudi
    Contact : 95430 79848
    94432 64239.

    .

    ReplyDelete
  8. அப்பாடா கல்வி செய்தி கமெண்ட் இல்லை என்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் நான் போய் தூங்கிட்டேன் பா.நல்ல வேலை இப்போதாவது எங்கள் கஷ்டம் புரிந்ததே...கல்வி செய்திக்கு நன்றி....

    ReplyDelete
  9. p.g commerce,economics,physics final list eppo sir?

    ReplyDelete
  10. Hello administration .. tet result kuda 1yearla vitanga. . Comments pannuna 2years kalichutha viduvinga pola

    ReplyDelete
  11. MY dear teachers. I will join from Next week.
    Because I have filed a case against TRB.
    For that i need to give fees. So dont mistake me..

    ReplyDelete
  12. வாழ்க வளமுடன்
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மம் வெல்லும்.

    ReplyDelete
  13. எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும்
    +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எல்லாம் எதற்கு??????????


    ஆளானபட்ட
    I.A.S தோ்வுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை.
    +2 வில் 654 எடுத்தவரும் Degree யில் 51% மதிப்பெண் பெற்றவரும் I.A.S தோ்வில் வெற்றி பெற்று அமைச்சு பணி செய்யவில்லையா?

    TNPSC GROUP I, GROUP II , DEO போன்ற தோ்வுகளுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை,

    கடவுளுக்கு சமமான மருத்துவா்கள் பணிநியமனத்துக்கு கூட +2 , Degree மதிப்பெண் எல்லாம் கேட்பதில்லை

    அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் எதற்கு????????


    ஏன் சட்ட மன்ற, பாராளுமன்ற மாண்புமிகு உறுப்பினா்களை தோ்வு செய்யும் போது கூட
    அந்த அந்தந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான் வெற்றி ....

    அதற்கு முன்... அதற்கும் முன் நடந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் எல்லாம் வெற்றி அறிவிப்பதில்லை,,,,

    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் ...+2 , Degree, B.Ed ல் எடுத்த மதிப்பெண் எதற்கு????????
    இது நியாயமா??????

    ReplyDelete
  14. போராடும் நண்பா்களே

    நமக்கு CV முடித்தபின் மாற்றப்பட்டதையே நாம் எதிா்க்கிறோம்.
    வெற்றி உறுதி வெற்றி உறுதி வெற்றி உறுதி

    எந்த ஒரு அரசும் செய்திடாத அவளம் எதற்காக

    ஆகஸ்டு 2013ல் நடத்தப்பட்ட தோ்வுக்கு எப்பொழுது அறிவிப்பு வநதது?

    ஜனவாி 2014 லில் CV முடித்தபின் ஒரு அறிவிப்பு அதுவும் ஆகஸ்டு 2013 TET க்கும் பொருந்தும் என்று,

    நடைமுறைகளைமாற்றுவது தவறுஅல்ல ஆனால் அது ஒரு செயல் தொடங்கும் முன் நடப்பதே சட்டத்திற்கும், மனிதாபமானத்திற்கும் மனித நேயத்திற்கும் ஜனநாயக மரபி்ா்கும் உகந்தது,

    ஏனோ இந்த கொடுமையான விபரம் இங்கு அரசுக்கும் வழிநடத்துவா்க்கும் தொியவில்லை?

    ReplyDelete
  15. TET தோ்வு எழுதிய நண்பா்களே ,

    TET தோ்வில் வெற்றி பெற்ற நண்பா்களே,

    எழுத போகும் நண்பா்களே,

    கல்வியாளாா்களே ????????????????

    தகுதி தோ்வு மதிப்பெண் உயா்த்த அடுத்த தோ்வுக்கு முயற்சி செய்யலாம்...

    ஆனால் +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எவ்வாறு உயா்த்த முடியும்?

    ஒரு பணிக்கு அறிவிப்பு முடித்த பின்

    தோ்வு முடித்தபின்

    CV முடித்தபின்

    அறிவிப்பினை மாற்றுவது நியாயமா?

    அம்மா அம்மா சொல்லுங்க அம்மா சொல்லுங்க
    நல்ல முடிவை சொல்லுங்க
    ஜனநாயக முறைப்படி சொல்லுங்க
    சட்ட முறைப்படி சொல்லுங்க
    மனிதாபிமானத்துடன் சொல்லுங்க
    தாய்உள்ளத்தோடு சொல்லுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி