நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்? - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்? - தினமணி

தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் முறை மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வு நடைபெறும்போதே, தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.

எனினும், பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் தாக்கல் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவு காரணமாக பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

36 comments:

  1. i naan tha 1st coment.............. order as soon as possible..........

    ReplyDelete
    Replies
    1. இன்றே நியமன ஆணை

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. VETTAI MURUGAN ,.are you educated?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. பணி நியமண ஆணை எப்போது வழங்குவார்கள்...

      Delete
  2. உச்ச நீதி மன்றம் முடிவு செய்யும்

    ReplyDelete
    Replies
    1. Iyya Vani ram neenga nenaikaramari udane poi appealnpannamudiyathu sammy athkku oru time tharuvaanga minimum 30 days aagum poi padi raja Next TET Examukku po ppa po...

      Delete
    2. தம்பி சுரேஷ் நான் படிக்க டெட்க்கு படிக்க வேண்டிய அவசியமே இல்ல.நான் ஏற்கனவே அரு பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக்கொண்டிருகிறேன்.சமச்சீர் கல்வி விஷயத்தில் நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாது.யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.வேட்டை மன்னன் ஜாக்கிரதையாக நாகரிகமாக எழுதவும்.எனக்கும் bad words use பன்ன தெரியும்.அப்பறம் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. மீண்டும் விரைவிலா? ஐய்யோ.என்னடா தோதனை.

    ReplyDelete
  4. நலத்துறை பள்ளிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் மறநதுவிட்டதா

    ReplyDelete
    Replies
    1. Athu TRB in rumour. Azhugira kuzhandhaikku vaazha pazham kaattuvaargal. Piragu sudukaatirkku vazhi kaattuvaargal. Porattattai thadukkave andha rumour.naalu idathathai koduthuvittu , Naalu elumbu thundai pottuvittom endru nam kathaiyai mudithu viduvaargal.

      Delete
  5. ஞாபகம் இருந்தது ஆனால் அதை போராட்டம் செய்து மறக்க வைத்த பெருமை போராட்டகாரர்களையே சேரும்

    ReplyDelete
  6. நலத்துறை பள்ளிகள் அறிவிப்பு எப்போது? அதையும் தெரிவித்துவிட்டால் ஆசிரியர் வேலை கிடைக்குமா? இல்லையா தெரிந்து கொண்டால் மன அமைதி பெறுவோம். சீக்கிரம் முடிவு எடுங்கள். அம்மா அவர்களே

    ReplyDelete
  7. Vijaykumar chennai sir give d details abt our appointment order

    ReplyDelete
  8. Hai good morning. Have a nice day.

    ReplyDelete
    Replies
    1. KAVALAI PADATHINGA SIR KAVALAI PADATHINGA ................. ANTHA STAY ORDER AUTOMATIC KA MAMIYAR VETUKKU POGUM SIR ...

      Delete
  9. 10 30am ku odar nu ungaluku yaru sona

    ReplyDelete
  10. when will we get order pls tell me any one

    ReplyDelete
  11. Anyone pls tell me chelladurai,rajalingam entha channel interviewla kasu koduthu vellaya ilanthangannu sonnanga I want that video....

    ReplyDelete
  12. Sridhar sir we r u? Wt about ap.order sir. I trust ur information sir.

    ReplyDelete
  13. After clearing the stay. App. order will be given

    ReplyDelete
  14. Elukundala vada venkataramana govinda govinda. Thanks

    ReplyDelete
  15. நண்பர்களே, நான் திருவண்ணாமலை மாவட்டம் (THIRUVANNAMALAI DISTRICT, GOVERNMENT HIGH SCHOOL, KILKUPPAM )அரசு உயர் நிலைப்பள்ளி, கீல்குப்பம் தேர்வு செய்துள்ளேன், அந்த பள்ளியின் அமைவிடம் மற்றும் செல்லும் வழி தெரிந்தவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். KILKUPPAM HIGH SCHOOL மற்றும் அதன் அருகில் தேர்வு செய்த நண்பர்கள் தொடர்புகொள்ள 9751088873. நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி