14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம் - தினமலர்

பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.

காரணம் என்ன?

கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். 'இந்த அரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும்' என, அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும் முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதிய முறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக, கல்வித்துறை வெளியிட்டது. இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும், 40 மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

தடை:


இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000த் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல், 2:00 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல், கல்வித்துறைக்கு கிடைத்தது.'புதிய ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், அவர்கள் பணியில் சேர, கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது' என, மதுரை கிளை, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உயர் அதிகாரிகளிடம் விளக்கினர்.தேர்வு பெற்ற, 14,700 பேரில், பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர்.

பணியில் சேர உடனடி தடை:

கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:தற்போதைய நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும்.பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, பணி நியமன கலந்தாய்வு, தொடர்ந்து நடக்கும். ஆனால், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

முதல் கோணல் முற்றும் கோணலானது :

ஆய்வுக் கூட்டம் நடத்துவதில், கல்வித்துறையை மிஞ்ச, வேறு ஒரு துறையும் கிடையாது. அந்தளவிற்கு, மாதத்திற்கு, 20 கூட்டங்களை நடத்துவர். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும், விளக்கமாக, ஆழமாக விவாதித்து, யாரும் ஆட்சேபனை எழுப்பாத வகையில், முடிவை எடுக்க மாட்டர்.'ஏனோ, தானோ' என, முடிவை எடுப்பதும், பின், அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாற்றுவதும் தான், கல்வித்துறையின் வாடிக்கையாக உள்ளது. ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறையை உருவாக்க, அமைச்சர் (அப்போது சிவபதி) தலைமையில், உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அமைப்பதற்கான அரசாணை, 2012, செப்., 14ல் வெளியானது. செப்., 14, 24 ஆகிய இரு நாட்கள் கூடி, ஆலோசனை செய்து, அக்., 5ம் தேதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுடன் கூடிய அரசாணையை வெளியிட்டு விட்டனர்.இந்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன் தான் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், கடந்த, மே 30ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டனர்.

19 comments:

  1. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வெற்றி வெற்றி
    Pls call me
    .
    Rajalingam...9543079848
    Raja...............9442799974
    Manimaran.. 9894174462
    Thangavel....9003435097
    Ponnusamy. 9843311339
    Dinesh..........7305383952
    Nallenthiran 9003540800



    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. கெடுவான் கேடு நினைப்பான்..
      Don't worry friend... selected candidates kandipa jobku povom... Kadavul nammai kapatruvar...

      Delete
  3. வணக்கம் நண்பர்களே
    இந்து நாளிதள், ஆசிரியர் தகுதி தேர்வு பிரச்சனை ‍ உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
    வெற்றிபெறுவோம்

    ReplyDelete
  4. Engaluku than intha nilama alredy vanthuruche. Ippo ungaluku vanthuruchu.engaluku emartam puthithu alla.nengalum oru murai santhikalam thavaru illi

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு உயர்ந்த உள்ளம்!!!

      Delete
    2. 13TE56208945 (01) Female OC 31/05/1969 Wtg.69.70 Selected in BT TAMIL… (add list)
      13TE06206618 (48) Female BC 29/06/1975 Wtg.68.86 BV Selected in Mathematics.

      இவர்கள் எல்லாம் 2012.ல் +2 படித்திருப்பார்களோ??? அதனால் தான் செலக்ட் ஆகிவிட்டார்கள் போல... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............................. ஏன் ஐயா சீனியாரிட்டிகு சான்ஸ் இல்லைனு ஊர ஏமாத்த பாக்குரீங்களா?????...............................................

      “”இந்த நவீன கால அறிவியல், நாகரீக வளர்ச்சியைப் பொருத்தே கல்வி முறை, நியமனங்கள், வெயிடேஜ் போன்றவை கணக்கிடப்பட வேண்டும்...,,””,.,. இது தான் நவீனமயமாதல் கொள்கை……


      ."""************வாழுங்கள் அல்லது வாழவிடுங்கள்...**********"".........
      .
      .
      Note::((""இதில் குறிப்பிடப்பட்டுள்ள இரு நபர்களின் விவரம் (அவர்களின்) அனுமதியின்றி பதிவிடப்பட்டுள்ளது... ஏதேனும் விமர்சனங்களுக்கு, (பயன்படுத்தியதற்கு) மன்னிக்கவும்,,,"")) நன்றி.....

      Delete
    3. தப்பு தப்பா தகவல் முன் வைக்காதீர்.அவர் பிசி அல்ல பிசிஎம்.

      Delete
  5. Engaluku than intha nilama alredy vanthuruche. Ippo ungaluku vanthuruchu.engaluku emartam puthithu alla.nengalum oru murai santhikalam thavaru illi

    ReplyDelete
  6. evvalavu year seniority wise thane posting potanga apa yaravathu juniorku podunganu sonnekala epa matum en epadi pesurenga

    ReplyDelete
    Replies
    1. அதேதான்.. இவ்வளவு நாள் சீனியாரிடீல வந்தீங்கள்ள,.. இப்ப எங்க Turn .. So pls ......

      Delete
    2. வந்து குறுக்கால முன்னாடி நின்னுக்க !

      Delete
  7. நண்பர்களே சென்னை உதவிபெறும் பள்ளியில் 3 தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான அறிவியல்(SC FEMALE ANY SCIENCE ) இடம் உள்ளது . விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ளவும் .8144170981

    ReplyDelete

    ReplyDelete
  8. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  9. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
    Counseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
    Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
    Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
    Trb tet certificate koduthuvitadhu
    September 8th arasu badhilalithu
    Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
    Angay siripavargal sirikatum adhu aanavasirpu
    Inge naangal sirikum punsiripe aanandha siripu

    ReplyDelete
    Replies
    1. ஓம் சாந்தி ஓம் சாந்தி

      Delete
  10. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    Because of poison G.o.no71

    Amma NANGAL SEITHOME
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA?




    ReplyDelete
  11. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி