அரசு தொடக்க பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்-கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

அரசு தொடக்க பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்-கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர்


“அரசு தொடக்க பள்ளிகளில், அக்டோபர் இறுதியில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்று கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் கூறினார்.

பெங்களூரு, குயின்ஸ் சாலை, காங்., அலுவலகத்துக்கு வந்த, அமைச்சர் கிம்மனே ரத்னாகர், கட்சியினரிடம் குறைகளை கேட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக பள்ளிகளில், 11,400 ஆசிரியர்களை நியமிக்க, நிதித்துறையிடமிருந்து, ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும்.

ஆசிரியர் நியமன செயல்பாடுகள், மாநிலத்தின், 30 மாவட்ட மையங்களில், ஒரே நாளில் நடக்கும். இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இது, அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும். சி.இ.டி., மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். டி.எட்., முடித்துள்ள, 22 ஆயிரம் பேர், இந்த தேர்வை எழுதவுள்ளனர். ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் அறிவு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, ஆண்டு தோறும், 5,000 ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள, முதல்வர்சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கல்வி அதிகாரி, டி.டி.பி.ஐ., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, அவசர சட்டம் வெளியிடப்படும். இச்சட்டத்தின்படி, அதிகாரிகள், தங்களின் சொந்த மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக, பணியில் நீட்டிக்க வாய்ப்பிருக்காது.கல்வி அலுவலகங்களில் உள்ள கிளர்க்குகள் உட்பட ஊழியர்களை, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிபுரிய அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் இடமாற்றம், தற்போது, ஐந்து சதவீதமாக உள்ளது. இதை, எட்டு சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.கணவன், மனைவி ஒரே இடத்தில் பணியாற்ற, மனிதநேய அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ௧.12 லட்சம் மாணவர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.சில பகுதிகளில், மாணவர்களே தனியார் பள்ளிகளுக்கு செல்ல விரும்பவில்லை. இன்னும், 11 ஆயிரம் மாணவர்கள், கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தாத, தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில், குடிநீர் வினியோகிப்பது, கழிப்பறைகள் அமைப்பது ஆகியவை தொடர்பாக, கிராம வளர்ச்சித் துறையுடன் இணைந்து, திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

14 comments:

  1. ----------------------
    FLASH NEWS
    ----------------------
    தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.

    www.tnteachersnews.blogspot.in

    -----------------

    ReplyDelete
  2. Monday judgement .. confirm .. 1 st case in court 2

    ReplyDelete
    Replies
    1. http://causelists.nic.in/temp/16385.html

      Delete
    2. COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I. The learned Advocates are informed that the matters once passed over would be called again before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. --------------------------------------------------------------------------------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~

      1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/2014 - DO -WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY (Service) S.SUREKHA IN Permit the petitioner MP.4/2014 - DO -AND WA.1038/2014 AND For Stay MP.1/2014 - DO -AND For Injunction MP.2/2014 - DO -AND For Direction MP.3/2014 - DO -AND WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014 (W.A.) S.SUREKHA ----------------R1. AND R2 SERVED ON 27/07/201 R1. THE STATE OF TAMIL NADU REP BY THE PRINCIPAL SECRETARY TO GOVT.SCHOOL EDUCATION DEPT. C

      Delete
  3. காலாண்டு ,அரையாண்டு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்ப்டுகின்றார்கள்.விழாக்களில் கலந்து கொள்வது ,உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது 10 ஆம் வகுப்பு,+2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடையாது.பள்ளிகளில்9ஆம்வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்க்ளும்,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு+2 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் கசக்கிப்பிழியப்படுகிண்றார்கள். தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசுப்பள்ளிகளிலும் இத்தகையப்போக்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்து.குறிப்பாக நாமக்கல், தர்மபுரி,பெரம்பலூர்,மாவட்டங்களில்.தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு வகுப்புகளுக்கு இப்பிபோதே அட்டவணை தயார் செய்துள்ளார்கள். வருகை தராத மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள்.சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழ்க்கு நிலுவையில் உள்ளது.நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி இத்தகையசிறப்பு வகுப்புகளை தடை செய்யவேண்டும்.அல்லது பள்ளிக்கல்வித்துறை உ த்தரவிடவேண்டும்.சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடும் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகமல் தடுக்கவேண்டும்.மாணவர்களின் மன அழுத்தமே பிற்காலங்களில் வன்முறையாக மாறுகிறது. மாணவர்களின் மோதல்கழுக்கும் இதுவே அடிப்படைக்காரனமாக அமைந்து விடுகிறது. நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  4. MONDAY THE HISTORICAL EVENT .

    TET CASES JUDGMENT

    ALL THE BEST FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. we hope your valuable words sir. thanks a lot

      Delete
    2. Vijayakumar sir, will the judgement be favour to us above 90.

      Delete
    3. Thank u dear Vijay Kumar chennai.

      Delete
  5. Karnadakavin selected method pottalavudhu tn govt athai paarthu thirundhum.

    ReplyDelete
  6. Coming mndy good solution to tntet 2013...Asiriyar paniyai avaludan ethir nokkum nan samoogathai munetra pathaiyil kondu sella ayarathu padupaduven ena urithiyerkiren...valga TN valarga India...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி