மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம்: ஆசிரியர் கூட்டமைப்பு தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம்: ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்.


தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் பாலசந்தர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி சங்க நிறுவனர் மாயவன் ஆகியோர் கூறியதாவது:
கல்வி உரிமை சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள கல்வி உரிமை சட்டத்தை, குழந்தை பிறந்தது முதல் 16 வயதுவரை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதத்தையும், மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதத்தையும்,ஒவ்வொரு மாநில பட்ஜெட்டிலும் 30 சதவீதத்தை கல்விகாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கல்வித்துறையில் தொகுப்பூதியம், பகுதி நேரவேலையை ஒழித்து,காலமுறை ஊதியம் அமல்படுத்த வேண்டும்.

கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சாரம் 30:1 என்ற விகித்தில் கொண்டுவர வேண்டும். பல பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அவர் 25 பாடங்களை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் சிறுமலை வேளாண் பண்ணை, பழநியில் மீனாட்சிநாயக்கன்வலசு உட்பட 10 பள்ளிகள் மாணவர்கள் வராததால், மூடப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதால் மூடப்படும் நிலையில் உள்ள 1600 பள்ளிகளின் பெயர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

7 comments:

  1. Gud morning friends. ..nallai theriyum enna nadakkum endru ...deerpil indha murai englukku velai kikkavittalum aduththa muraiyavadhu indha weitage murai illamal irukka vendukirom .amma nalla vali kattungal plzzz......

    ReplyDelete
  2. கான்வென்ட் பள்ளிகளை மூடினால் கவர்மென்ட் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இருக்காது!!!

    ReplyDelete
  3. ஐயா, அரசு பள்ளிகளில் எதற்கெல்லாம் மாணவர்கள் கட்டணம் செலுத்த வெண்டும்.

    ReplyDelete
  4. MP, MLWA ,C.E.O, DEO, HM ,PRESIDENT,COUNCILOR' S SALARIYA CUT PANNUNGA . SCHOOL YANNAMA NADAKKUM PARUNGA. PALIKUDATHA MOODURATHU EASY, ANAL OPEN PANDRATHU KASTAM. ARASANGAM YOSIKKANUM. POTHUMAKKALUM YOSIKKANUM.

    ReplyDelete
  5. COMPUTER VIA TEACHING , GAMES INSTRUMENTS, EXTRA CURRICULAR ACTIVITIES, PTA & PRO COOPERATION , AREA WELFARE TRUST ALSO LEAD TO MAINTENANCE THAT SCHOOL IN THAT SAME AREA.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி