ஜெ., க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

ஜெ., க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு.


பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்.தொடர்ந்து ஜெயலலிதா, பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா விரும்பினால் தமிழக சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இதற்கிடையில் கோர்ட் அறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார்.112 பக்க தீர்ப்பை நீதிபதிகுன்கா படித்தார். தண்டனை முழு விவரம் அறிவிக்கப்படும் முன்பே, ஜெயலலிதாவை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்.

தமிழகம் முழுவதும் பரபரப்பு:

இதற்கிடையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; கடைகள் அடைக்கப்பட்டன. ஈரோடு, அரசு மருத்துவமனை முன்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை அ.தி.மு.க.வினர் எரித்தனர். விருத்தாசலம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தின் முன், கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க.,தலைவர் கருணாநிதி வீட்டின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் கூடினர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெ., குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும், கருணாநிதி வீட்டின் முன் கூடியிருந்ததி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மதுரையில் உள்ள சுப்ரமணியசாமி வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பல மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஆத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், திருநெல்வேலி, பழநி, திருமங்கலம், வேலூர், காரைக்குடி, தூத்துக்குடி நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பும், பஸ்கள்மீது கல்வீச்சும் நடந்தது.ரயில் மறியல்:பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். திருமங்கலம் அ.தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திருசெந்தூரில் இருந்து பழநி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்ததால், அந்த ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்குபயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. மயிலாடுதுறையில் கோர்ட் தீர்ப்பை கண்டித்து அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. கோவில்பட்டியில் தனியார் பஸ் மீது கல் எறிந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது,துறையூரில், கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடப்பட்டிருந்த தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றினர். இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சாவூரில், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகள் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்; கடைகள் அடைப்பு:

பண்ருட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பண்ருட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டியபஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் ரயில் மறியலில்அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், நாகப்பட்டனம் ரயில்வே ஸ்டேஷனிலும் , திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.மேலூரில் அ.தி.மு.க., தரப்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள்காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

5 comments:

  1. tet la pass panniya 20 varusama kaaththukidantha enkalai ematriya entha arasuku thandanai paththaathu.enkal venduthalkalil ethaiyathu kadavul niraivetri erukar.thanks god.enkal kanneer ennum kuraiela.enkal vethanai enkalai vanjitha anaivaraium vidathu

    ReplyDelete
    Replies
    1. First adutha testku padikira vellaiya paru. summa polamba athiyavathu correctta pannu.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. OUR PERMANENT CM AMMA WILL COME SOON.. SHE IS A GOOD ADMINISTRATOR AND GOOD LEADER... I AM MEDITATING FOR HER TO COME BACK AGAIN.. SURELY SHE WILL TAKE CHARGE AS A CM OF TN.. WHO GAVE THE PERMISSION TO TELL THE JUSTICE FOR OUR AMMA.. AMMA IS KING.. SHE IS A KING OF ALL JUDGES.. NOW ONWARDS I AM MEDITATING .. I CAN USE ALPHA MEDITATION FOR HER TO COME BACK AGAIN AND BECOME PERMANENT CM.. THIS IS TRUE.. AMMA WILL RELEASE ON 01.10.2014... SURE SURE SURE.. SO DONT WORRY FRIENDS..

    ReplyDelete
  4. தமிழக முதல்வருக்காக அனைவரும் நிதி திரட்டுவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி