அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறது- மாலை மலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறது- மாலை மலர்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவர் முதல்– அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் தலைமையிலான மந்திரிசபையும் பதவியில் இருந்து விலக உள்ளது.
ஜெயலலிதா பதவி இழந்துள்ளதால் அடுத்து புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதனால் புதிய முதல்–மந்திரியாக யாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த தடவை 2001–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்– மந்திரி பதவியில் இருந்து விலக நேரிட்ட போது ஓ.பன்னீர்செல்வம் முதல்– அமைச்சராக பதவி ஏற்றார். மீண்டும் அவர் முதல்வர் ஆகக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அடுத்த முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட 4 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாலாட்சி நெடுஞ்செழியன், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் ஆகியோரது பெயர்கள் பேசப்படுகிறது.இவர்கள் தவிர முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றிரவு தெரியவரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி