மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி,ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு 100 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும். இதன்படி ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி 107 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்தது.இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய உடன் மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகி விட்டது.இதனால் தங்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது மாத கடைசி என்பதால், இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.நவராத்திரி, தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகை காலம் வருகிறது. எனவே தமிழகத்திலும் 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன் வழங்கவும், அகவிலைப்படி நிலுவைத்தொகையை சேர்த்து வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி