உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?


'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என,அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் அலுவலகத் தில் கொடுத்த, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012ல், 451 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட, 753 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்தது. அதன்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. தகுதி வாய்ந்த நபர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும்நடந்தது. அதன்பின் அப்பணி நிறுத்தப்பட்டு விட்டது. அடுத்து, 2013ல்,116 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, உடனடியாக மாநில பதிவு மூப்பு பட்டியல் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. WAITING FOR HOT NEWS FROM TN GOVT TODAY !!

    ReplyDelete
    Replies
    1. தினதந்தி செய்தி
      ஆசிரியர்கள் நியமனத்தில்
      வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்
      விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

      சென்னை, செப்.4-
      ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

      விஜயகாந்த்
      தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
      தற்போது போராட்டம் நடத்தி வரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது.
      ரத்து செய்ய வேண்டும்
      பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.

      வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
      இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

      டாக்டர் ராமதாஸ்
      பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
      பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
      அதே நேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
      தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.
      தமிழக அரசு நடவடிக்கை
      ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
      இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

      Delete
  2. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
  3. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
  4. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
  5. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  6. ஓவியம் மற்றும் தையல், இசை ஆசிரியர் பணி நியமனம் எப்போது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி