"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது'!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2014

"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது'!!


மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்எடுப்பதற்காக விடுமுறை நாள்களிலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என கல்வித் துறை அலுவலர்கள் வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இக் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத் தலைவர் வெ. வீரபாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் கே.எம். மூர்த்தி விளக்கவுரையாற்றினார். மாநிலத் தலைவர் ஜி. சுப்பையா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசாணை எண் 720இல் உள்ள குறைபாடுகளைக் களைய நியமிக்கப்பட்ட கருணாகரன் குழு அறிக்கையை கல்வித் துறை வெளியிட்டு, அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 1989-90ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்குப் பணியில் சேர்ந்த நாள் முதல்பணிக் காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்ச்சி விழுக்காட்டை காரணம் காட்டி ஆசிரியர்களை ஒருமையில் பேசுவதை கல்வித் துறை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்ச்சி விழுக்காட்டை கட்டாயமாக 100 சதவீதம் என வலியுறுத்தக் கூடாது. காலிப் பணியிடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சி.ச.சு.நா. அரசுப் பள்ளி ஆசிரியர் கு. பழனிச்சாமி கெüரவிக்கப்பட்டார். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

10 comments:

  1. ஆல் எஜூகேட்டஸ் மன்டயன்ஸ்களா
    டோனட் வொரி முூஞ்ச கொஞ்ச சிரிச்ச மாதிரி வைங்கப்பா
    நாளைக்கு உஸ்கூலுக்கு போனா நம்ம டெரர் முஞ்சிய பாத்து ஆல் சில்ரன்ஸ்கு வேப்பில தான் அடிக்கனும்
    முக்கா கெனறு தான்டியாச்சூ இன்னங் கொஞ்சந்தான்
    தட் ப்ளாக் பிக் பத்தியோ அவனோட அன்டப்பழுக பத்தியோ கவல படாதீங்க
    அப்புறம் இன்னைக்காவது பல்லு வௌக்கிட்டு டீ குடிங்கடா

    ReplyDelete
  2. ஆய் கவுண்டா நீ எல்லாத்தையும் வெளக்கிட்டாச்சாப்பா

    ReplyDelete
    Replies
    1. சுத்தமா வௌக்கி வச்சிறுக்கங்னா ஏன் இன்ஸ்பெக்சன்கு வரீங்ளா

      Delete
    2. அட்ரா அட்ரா சக்க. ம் பழனி பஞ்சாமிர்தம் கொண்டாரேன்

      Delete
    3. இஸிட் தேங்ஸ் நன்பரே

      Delete
  3. காலாண்டு ,அரையாண்டு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்ப்டுகின்றார்கள்.விழாக்களில் கலந்து கொள்வது ,உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது 10 ஆம் வகுப்பு,+2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடையாது.பள்ளிகளில்9ஆம்வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்க்ளும்,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு+2 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் கசக்கிப்பிழியப்படுகிண்றார்கள். தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசுப்பள்ளிகளிலும் இத்தகையப்போக்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்து.குறிப்பாக நாமக்கல், தர்மபுரி,பெரம்பலூர்,மாவட்டங்களில்.தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு வகுப்புகளுக்கு இப்பிபோதே அட்டவணை தயார் செய்துள்ளார்கள். வருகை தராத மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள்.சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழ்க்கு நிலுவையில் உள்ளது.நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி இத்தகையசிறப்பு வகுப்புகளை தடை செய்யவேண்டும்.அல்லது பள்ளிக்கல்வித்துறை உ த்தரவிடவேண்டும்.சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடும் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகமல் தடுக்கவேண்டும்.மாணவர்களின் மன அழுத்தமே பிற்காலங்களில் வன்முறையாக மாறுகிறது. மாணவர்களின் மோதல்கழுக்கும் இதுவே அடிப்படைக்காரனமாக அமைந்து விடுகிறது. நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படவேண்டியது அவசியம்

    ReplyDelete
    Replies
    1. Anitha tho அது என்ன என்ன வழக்கு? அதன் விவரம் சொல்லுங்கள் நண்பரே..
      மேலும் பள்ளி நேரம் முடிந்து மாலை வகுப்பு வைப்பதும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு வைப்பதும் கட்டாயம் இல்லை அது அந்தந்த ஆசிரியரைப்பொறுத்தது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. அந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட நகல் கிடைக்குமா நண்பர்களே...?

      Delete
  4. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???

    Source From : The Hindu Covai Edition

    ReplyDelete
  5. பள்ளி நேரம் முடிந்து மாலை வகுப்பு வைப்பதும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு வைப்பதும் கட்டாயம் இல்லை அது அந்தந்த ஆசிரியரைப்பொறுத்தது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. அந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட நகல் கிடைக்குமா நண்பர்களே...?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி