மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அக்டோபர் மாதத்திற்குள் பணி வழங்காவிட்டால் ஊதியத்தை மட்டுமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் 13ஆயிரத்து 500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு மேல் முறையீடு செய்தால் அதை எதிர்த்து நாமும் முறையீடு செய்ய வேண்டும்...
ReplyDelete