அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து.


சென்னையில், இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கானபோட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை தற்காலிகமாக நியமிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

இதை, போட்டித் தேர்வு மூலம் நிரப்பும் வகையில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான போட்டித் தேர்வு, சென்னையில் இன்று (செப்., 28), மூன்று இடங்களில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் செய்திருந்தது. இந்த நிலையில், திடீரென போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வில் பங்கேற்போர் வேண்டுகோளின் பேரில், தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி