மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆசிரியர் பணியிடங்களில், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்புநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து, பதிலளிக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தின், மாநில செயலர் நம்புராஜன், தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறை, கடந்த மார்ச் மாதம், ஒரு அரசாணையை வெளி யிட்டது. 'வெவ்வேறு துறைகளில் உள்ள பின்னடைவு காலியிடங்களை, சிறப்பு தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், 1,107 பின்னடைவு காலியிடங்களை, மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்த பின்னடைவு காலியிடங்களை நிரப்பாமல், கடந்த மாதம், புதிதாக பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதலில், காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். பின்னடைவு காலியிடங்களை நிரப்பாததால், மாற்றுத் திறனாளிகளின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்.
பின்னடைவு காலியிடங்களை நிரப்பிவிட்டு, புதிய அறிவிப்பை வெளியிட, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க, அரசு பிளீடர் மூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர். இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுபற்றி தெளிவுபடுத்தவும், அரசுக்கு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, அக்டோபர், 7ம் தேதிக்கு, தள்ளி வைத்தது.
இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ReplyDelete1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,
sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.
குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 9543391234
09663091690
I request all the selected candidates pls register more comments for punishing the strickerss
ReplyDeleteSeniority படி போஸ்ட்டிங் போடுங்க.Work experience, employment seniority is enough for wtg
ReplyDeleteNe unmailaye select ah un no soluu
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteதினதந்தி செய்தி
Deleteஆசிரியர்கள் நியமனத்தில்
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்
விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, செப்.4-
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது போராட்டம் நடத்தி வரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது.
ரத்து செய்ய வேண்டும்
பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
அதே நேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.
தமிழக அரசு நடவடிக்கை
ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Dai vara vare kudigaranuga tholla thanga mudiala rathire fulla kudichitu kalaile karuthu sollranuga thoo
DeleteisaiaruviSeptember 4, 2014 at 9:24 AM
Deleteடாக்டா் ராமதாஸ் அவா்கள் டாஸ்மாக் கடைகளை மூடசொல்லி வலியுறுத்துராா்...
ஆனால் அம்மா அனைத்த கிராமங்களிலும் கடைய திறக்கிராங்க.....
இவா்களில் யாா் நல்லவங்க உங்கள் பாா்வையில்..........
Ready guys next namma porattam namudayathu 50 persons vs 10700 pathidalam oru kai
ReplyDeleteI am B.Sc Biochemistry with B.Ed. Biochemitry not eligible for school BT post. Confirm by TRB and same teacher educationUniversity. 2010 madras high court said that bio chemistry not equivalent to chemistry. So not eligible for BT post. The beauty of this govt and educator till b.ed admission going on for bio chemistry. When i asked Tamilnadu teacher education university genius said that sir your eligible for study b.ed but your not eligible for teaching job.(pls check 2014-2015 b.ed guide line bio chemistry eligible for b.ed physical science ) from TNOU.why i am telling you this govt people doesn't know what they doing.still no equivalent degree for bio chemistry
ReplyDeleteSame TET exam. They doesn't know what to do
No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...
ReplyDeleteNo weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...
ReplyDeleteCorrect Seniority படி போஸ்ட்டிங் போடுங்க.Work experience, employment seniority is enough for wtg
Delete☆☆☆மறவாதீர்..☆☆☆
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்
இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...
வழக்கு...
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
So nama ellorum romba romba late...
அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...
அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...
TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
ஏன்..இப்பொழுதும் முடியும்..
2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...
ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...
இது தான் சரியான தீர்வு....
இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...
வெற்றி நிச்சயம்....
☆☆☆மறவாதீர்..☆☆☆
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...
நன்றி...
Alan Ani......
No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...
ReplyDeleteமாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்கள் நியமனம் சார்பாக அரசு விரைவில் பதிலளிக்கட்டும். 1107 மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பின்னடைவுப் பணியிடங்கள் உள்ளதால் - எஞ்சியுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டுகிறோம்.
ReplyDelete