அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.

இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

26 comments:

  1. Replies
    1. இங்கு தடையாணை இருக்கும்போது சுப்ரீம் கோர்ட் தடை குடுக்கமுடியாதென்றும் இன்று தடையாணை விலகியதும் நாளை காலை 10.30.மணியளவில் தடையாணை கிடைத்துவிடும் என்று டெல்லியில் முகாமிட்டுள்ள போராட்டகாரர்கள் கூறுவதாக தகவல்.37 நபர்கள் டெல்லியிலிருப்பதாக தகவல். நாளை சுப்ரீம் கோர்ட்ல தடையாணைஆசிரியமனத்திற்க்கென்று தகவல் கசிகிறதே.போராட்டகாரர்கள் திட்டமிடப்பட்டபடி டெல்லியிலுல்னர் ஐய்யோ ஐய்யய்யோ சீக்கீரம் ஆர்டர கொடுங்கப்பா நைட்டே போய் ஜாயின் பண்ணிறேன் இனிமேல் காலதாமதம் ஆனால் சாகரத தவிர வேற ஒன்னும் இல்ல.அப்பா தமிழக அரசே கொஞ்சம் வேகமா செயல்படகூடாதா.

      Delete
  2. Why there is no news about appointment order

    ReplyDelete
  3. இங்கு தடையாணை இருக்கும்போது சுப்ரீம் கோர்ட் தடை குடுக்கமுடியாதென்றும் இன்று தடையாணை விலகியதும் நாளை காலை 10.30.மணியளவில் தடையாணை கிடைத்துவிடும் என்று டெல்லியில் முகாமிட்டுள்ள போராட்டகாரர்கள் கூறுவதாக தகவல்.37 நபர்கள் டெல்லியிலிருப்பதாக தகவல். நாளை சுப்ரீம் கோர்ட்ல தடையாணைஆசிரியமனத்திற்க்கென்று தகவல் கசிகிறதே.போராட்டகாரர்கள் திட்டமிடப்பட்டபடி டெல்லியிலுல்னர் ஐய்யோ ஐய்யய்யோ சீக்கீரம் ஆர்டர கொடுங்கப்பா நைட்டே போய் ஜாயின் பண்ணிறேன் இனிமேல் காலதாமதம் ஆனால் சாகரத தவிர வேற ஒன்னும் இல்ல.அப்பா தமிழக அரசே கொஞ்சம் வேகமா செயல்படகூடாதா.

    ReplyDelete
    Replies
    1. Iyoo aasaiya paru nalaikum vada pocheee........

      Delete
    2. வட போச்சே கண்ணா.வட போயிடுமேன்னு பயமா இருக்கியா.கண்ணா வட கிடைச்சிடுமா.

      Delete
  4. Vijay Kumar Chennai sir pls comment about appointment order why government not announce about appointment order?? We are waiting for your valuable comments

    ReplyDelete
  5. இன்னும் தாமதம் செய்வதற்கான காரணம் தெரியவில்லையே.....

    ReplyDelete
  6. My dear Tet. Friends.

    மதுரையில் சில வழக்குகள் இன்று Number ஆகாமல் இருப்பதால் அவை நீதீபதியின் முன்பு விசாரணைக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுபெறும்.
    மதியத்திற்குள் முடிவாகிவிடும்.
    நாளை மாலையிலிருந்து நற்ச்செய்தியை எதிர்பார்க்கலாம்.
    வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  7. டெல்லியில் போராட்டகார்கள் இருக்கிறார்களா?

    ReplyDelete
  8. inum tet case iruka sir... athanala odr koduka late aguma..

    ReplyDelete
  9. vijayakumar sir stay than vacate airuche... aprm ena sir..

    ReplyDelete
    Replies
    1. innum sila case irrukkam.athukku stay remove pannalaiyam.pls wait

      Delete
  10. Every writ petition bring to in front of Judge then dismiss. That is court procedure.
    Don't. Worry. All is well

    ReplyDelete
    Replies
    1. அது வரைக்கும் போராட்டகாரஞ்ஞ பேசாம இருப்பாங்களாய்யா.ஐய்யோ

      Delete
    2. நல்லதே நினையுங்கள்... நல்லதே நடக்கும் ...

      Delete
  11. super govt and judge , don't worry next election 2016 exam 50 mark edutha job 90ku mel edutha kedaiyathu ( this is like giving laptop , grinder , cow ) free job just put your vote to admk

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி