கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2014

கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....



சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், பேராசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு 


‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: செப்டம்பர் 5, 1888

பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: ஏப்ரல் 17, 1975

தொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்

நாட்டுரிமை: இந்தியா



பிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.

இல்லற வாழ்க்கை

ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.

ஆசிரியராக அவருடைய பணி

முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.

1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள். 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்தப் படைப்பாகும்.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.

மேலும் அவருடைய பணிகள்

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

அரசியல் வாழ்க்கை

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார்.

இறப்பு

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.

28 comments:

  1. மேலும் ராதாகிருஷ்ணன் அவர்கள் ரஷ்யாவிற்கான இந்திய வெளியுறவு தூதுவராகவும் இருந்துள்ளார். அனைவரும் கண்டு அஞ்சும் ஸ்டாலின் அவர்களிடம் அவர் உடல்நிலை மோசமாக இருந்த போது அவரிடம் மிக நெருக்கமாக அமர்ந்து அவரை வருடி ஆறுதல் சொல்லியவர் இதனால் ஸ்டாலினுக்கு ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது ஒரு நல்ல எண்ணம் உருவாகியது
    தன்னை அனைவரும் அதிகாரியாக் பார்க்கும் சமயத்தில் ஒரு மனிதராக பார்த்தவர் ராதாக்ருஷ்ணன் என்று கூறியுள்ளார்...
    அது மட்டுமில்லாம கம்யூனிஸ்ட் கொள்கைகொண்ட ரஷியாவில் ஆன்மீகத்தையும் இந்திய வரலாற்றையும் பற்றி எடுத்துரைத்தவர்....

    இவருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே நட்பிருந்தது அனைவரும் தெரிந்ததே இதில் நாம் படித்த உளவியல் அறிஞர் "பாவ்லோ" அவர்களுக்கும தொடர்புண்டு இவர்தான் இருவருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார்...

    ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியுறவு தூதுவராக இருந்தாலும் தனக்கான கொள்கைகளிலிருந்து மாறாதவர்... ரஷியாவில் அரசு முறை விருந்துகளில் கலந்து கொண்டாலும் மது, புலால்இவற்றை ஒதுக்கியே வந்துள்ளார்..

    அதுமட்டுமில்லாமல் சரியான நேரத்தில் ஓய்வு காலை கண்விழிப்பு இவற்றையும் ஒரு கால முறையோடு கடைபிடித்தவர்.. விருந்துகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காலம் சென்றால் அங்கே அவரை பார்க்கமுடியாது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. 1950ல் இந்தியஅரசு இராதா கிருஷ்ணனை ரஷ்யாவின் அரசாங்கத் தூதுவராக நியமித்தது.

    அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தார். அடிமைப் பட்டுக்கிடந்து அப்போது தான் விடுதலை பெற்ற இந்திய நாட்டின் மீது அவருக்கு அவ்வளவாக உயர்ந்த அபிப்ராயம் இல்லை.

    இந்த நிலையில் தான் இராதாகிருஷ்ணன் அங்கு தூதராகச் சென்றார். ரஷ்யாவின் தூதர்பணி முடிந்து இந்தியா திரும்புகையில் அவருக்கு பிரிவு உபசார விருந்து அளிக்கப்பட்டது. ஒர் அரசாங்க தூதருக்கு ரஷ்ய அமைச்சகம் விருந்தளித்து கௌரவிப்பது அதுவே முதல்முறை. பெரும்பாலும் இரவில் நடக்கும் விருந்துகள் ராதாகிருஷ்ணனின் வசதியை முன்னிட்டு பகலிலேயே நடந்தது.

    மாஸ்கோவில் இருந்து புறப்படும் முன் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் நோய்வுற்றிருந்தார். அவருடைய முகம் வீங்கி யிருந்தது. பாரத நாட்டின் வேதாந்தியான இராதாகிருஷ்ணன் அவரின் கன்னங்களை மெதுவாக வருடினார். முதுகைத் தடவிக் கொடுத்தார், ஆரத்தழுவிக் கொண்டார். தத்துவ ஞானியின் இந்த அன்புப் பெருக்கு ஸ்டாலின்உள்ளத்தை உருக்கிவிட்டது. ‘மற்றவர்கள் நினைப்பது போல் என்னை அரக்கனாகஎண்ணாமல் மனிதன் என்று எண்ணிப் பழகிய முதல் மனிதர் நீங்கள்தான்.
    நீங்கள்பிரிந்து செல்வது பற்றி மிகவும் வருந்துகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நான் இனி அதிக காலம் இருக்க மாட்டேன் என்றார் ஸ்டாலின்.

    இராதா கிருஷ்ணனன் விடைபெற்றபோது அவர் கண்கள் கலங்கின. அவர் கூறியபடியே ஆறு மாதங்களுக்குப்பின் ஸ்டாலின் மறைந்து விட்டார். யாரையும் எளிதில் பாராட்டி விடாத ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியது இராதாகிருஷ்ணனை மட்டும் தான்..

    ReplyDelete
    Replies
    1. my tet certifiicate not download, what can i do?

      Delete
    2. Katoorai arumai SRI Sir AASIRIYAR THINA NAL VAAZHTHUKAL.. & All

      KALVISEITHI FRIENDS kum NAL VAAZHTHUKAL.

      Delete
  5. My tet certificate not download, what can i do? Help me

    ReplyDelete
  6. my tet certificate not download, what can i do? Help me..

    ReplyDelete
  7. என்ன இன்று யாரையும் கானோம்

    ReplyDelete
  8. Great Leader Radhakrishnan..................
    Really Good Salute...............

    ReplyDelete
  9. Anaithu Asiria peru makkalukkum viraivil paniyil sera ulla Asiriarkalukkum enadhu manamarndha Asiriar thina nal vaalthukkalai therivithukkolkiren

    ReplyDelete
  10. Teacher is the lamp of nation. Education plays a major role for growth of the society. Salute all Teacher's of the nation. WISH YOU HAPPY TEACHER'S DAY

    ReplyDelete
  11. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!!!!!!

    ReplyDelete
  12. அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும், கல்விச்செய்தி நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!! 

    நானும் முதன் முதலாக அரசுப்பள்ளியின் ஒரு முதுகலை ஆசிரியராக!!! 

    மதிப்புமிக்க இத்திருநாளை பணியில் சேர்ந்த 5 வது நாளிலே கொண்டாடி மகிழ உள்ளேன்...

    இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!

    மேலும் TET PAPER1மற்றும் PAPER2 நண்பர்களும் விரைவில் பணி நியமனம் பெற்று பணியில் சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி!!!

    ReplyDelete
  13. what is level of stay order. any body knows.

    ReplyDelete
  14. கரும்பலகை எனும் கருப்பு வயலில் வெள்ளை எழுத்துக்களை சாகுபடி செய்து "கல்வி" எனும் அழியாத விளைச்சலைக் கொடுப்பவநன்தான் நவின விவசாயி எனும் ஆசிரியர். அனைவருக்கும் "ஆசிரியர் தின" நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அனைத்து கல்விச்செய்தி நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நின்று ஒரு கப்பல் நிறுவனம் நிறுவி அதனை திறமையாக நடத்தி கிழக்கிந்திய கம்பனிக்கு சவாலாக விளங்கிய சான்றோர் அவர்
    . வ.உ.சி யின் திருக்குறள் உரை மிக சிறந்த பக்க சார்பற்ற தெளிவான உரையாகும்.அதை போன்ற ஒரு அருமையான உரையினை இதுவரை யாரும் செய்ய வில்லை.வ.உ.சி யின் அந்த முகம் மிகவும் அற்புதமானது.
    அவர் நினைத்திருந்தால் ஓட்டபிடாரத்தில் ஒய்யாரமாய் வாழ்ந்திருக்கலாம்.அவர் யாருக்காக போராடி சிறை பட்டு செக்கிழுத்து பிணி வாய்ப் பட்டு மடிந்தார்?
    சினிமா நடிகனின் பிறந்த நாளை நினைவில் வைத்து கொண்டாடும் தமிழர்காள் ஒரு கணம் அந்த மானமிகு மறத்தமிழனை நினைத்துப் பாருங்கள் .
    - திலீபன்

    ReplyDelete
  17. டி.என்.பி.எஷ்.ஷி. போலவே டி.ஈ.டி. மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு தேவையான அளவிற்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். இது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி