TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

TNTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள்.


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ரோசைய்யா அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை சமர்பிக்க ஆளுநர் மாளிகை எதிரே கூடினர்.
ஆனால் ஆளுநர் இன்று நடைபெற இருந்த மந்திரி சபை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் அவர் சார்பாக அவரின் நேர்முக உதவியாளர் போராட்டக்கார்களில் 5 பேர் கொண்ட குழுவை மட்டும் அலுவலகத்தினுள் அனுமதித்து, கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டெட் தேர்வர்களின் போராட்டம் பற்றி மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும், விரைவில் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

இதன் பிறகு தேர்வர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கும் தகவல் அறிந்து அவரின் கவனத்தை கவர்வதற்காக காந்தி மண்டபத்தில் காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து நாளை 16ஆம் நாள் போராட்டம் நடைபெற இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

13 comments:

  1. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Ivarkal more than 15 days poratam.panrankan nichiam ivatkal pin arasiyal vathi support irukum amma atchiku ava paier undakanumnu ilana ivarkaluku pana palan enku irubthu varukirathu chennai la stay pana food ++++++ nichiamala arodia thunduthal iruku poratma thalami bakikum selathurai puliankudi rajalingam + 80% youngster tha think support arasial peron & public

    ReplyDelete
  3. என் கேள்வி
    ஆறு மாதம் உறஙகி பெயர் இல்லை என்றவுடன் போராட்டம் செய்வது நியாயமா
    வழக்கு நீதிமன்றத்தில் உள்ள பாது போராட்டம் நியாயமா
    அரசுக்கு விராதமாக மற்றவரை தூண்டியது நியாயமா
    பணம் வசூலித்தது நியாயமா
    என் தரப்பே சரி மற்றவரை பற்றி கவலை இல்லை என்று சொண்னாயே நியாயமா
    விசம் என்று நாடகமாடினாயே நியாயமா
    எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்றாயே நியாயமா
    சீப் பப்ளிசிட்டி செய்கின்றாயே நியாயமா
    50 பேரால் இத்தணை முடியும் என்றால் நாங்கள களம் இறங்கினால் ???

    ReplyDelete
  4. இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள் வேண்டி சென்னையில் முகாமிட்ட முதல் நாள்(31.8.14) தொடங்கி இன்று வரை....

    முதல் நாள்:
    சுமார் 20 பேர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து கோரிக்கை மனு தயார் செய்தோம் .பின்பு எங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்த அனைத்து மீடியா உதவியையும் நாடினோம் .

    கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
    1.2013-14 vacancy
    2.English medium vaccancy (4000)
    3.Sgt to BT promotion vaccancy
    4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

    இரண்டாம் நாள்:
    32 பேர் ஒன்றுகூடி தலைமை செயலகம் சென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் மூன்று பேர் அனுமதி பெற்று Innocent Dhivya IAS (PA Of CM) அவர்களிடம் மனு கொடுத்தோம். பின்பு
    TRBல் மனு கொடுக்க முயற்சி செய்தோம்.

    மூன்றாவது நாள்:
    11 பேர் ஒன்றுகூடி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் சார்பான மேற்கண்ட கோரிக்கையை மீடியாக்களில் தெரிவிக்க முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் மைதானம் அருகே மண்டபத்தில் அடைக்கப்பட்டோம்.

    நான்காம் நாள் :
    Trb அலுவலகம் முன்பு அமர்ந்து சுமார் 25 பேர் " கூடுதல் பணியிட அறிவிப்பு " வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் இருந்தோம்.

    ஐந்தாவது நாள்:
    அன்றும் Trb அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரிய நண்பர்கள் 21 நபர்கள் இணைந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்.கைது செய்யப்பட்டோம் .ஐயா திருமாவளவன் அவர்கள் வந்து நம்பிக்கை ஊட்டினார். இரவு பட்டதாரி ஆசிரியர்கள் நண்பர்கள் எங்களுக்கும் தங்குவதற்கான இடவசதி செய்து கொடுத்தனர்.

    ஆறாவது நாள்:

    இடைநிலை ஆசிரியர்கள் 32 பேர் இணைந்து பட்டதாரி ஆசிரியர்களுடன் Tamilnadu Election commission office முன்பு கூடி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சித்தோம்.விளம்பர பலகைகள் மூலமாக நமது கோரிக்கையை மீடியாக்களில் வெளிப்படுத்தினோம்.பின்னர் தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நெற்குன்றம் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். அவ்விடத்தில் ஐயா ஜி.கே.மணி அவர்களும் வந்து நோக்கத்திற்கு வலு சேர்த்தார்.

    ஏழாவது நாள் :
    இன்று, Just 5 sgt members மட்டுமே இருந்ததால் செய்வதறியாது திக்கற்று நின்றோம். ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களது போராட்டபயணம் ஆளுனர் மாளிகை நோக்கி தளறாமல் சென்றது .


    ஓர் அனுபவம்...
    முதல் நாளில் நண்பர் ஒருவர் Hotel அறையில் "fan க்கு அடியில் பஞ்சு மெத்தையில் தான் படுப்பேன் " என அடம்பிடித்தார். ஆனால் நேற்றைய இரவிலோ திண்ணையைத் தேடி தேடி இடம்பிடித்தார்.

    எண்ணிக்கை குறைந்தாலும் நம்பிக்கை குறையவில்லை...
    இடம் மாறினாலும் தடம் மாறவில்லை. .

    பயணம் தொடரும் கூடுதல் உற்சாகத்துடன்...

    இப்படிக்கு
    கோயம்பேடு பஸ் நிலையத்தில்
    சத்தியமூர்த்தி 95433 91234, 9597239898
    சத்யஜித் 09663091690

    ( ஆயிரக்கணக்கான கொசு நண்பர்களுடன். .)









    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் நண்பரே உங்களுக்கு உதவ பட்டதாரி ஆசிரியர்களான நாங்கள் இருக்கிறோம்....

      Delete
    2. honest and hard work never fails.

      Delete
  5. பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்
    selectedcandidates.blogspot.in

    ReplyDelete
  6. கல்லூரிப்படிப்பை வேலைக்ககான அளவுகோலாக கருதக்கூடாது என UGC தென்னக செயலாளர்
    திரு. ஜி. சீனிவாஸ் தெரிவித்துள்ளார் -தினமலர் 7-9-2014


    ReplyDelete
    Replies
    1. 100% absolutely correct. Same period, same syllabus, same question paper so, tet marks only consider otherwise add marks for seniority and experience.
      Like PG assist why govt. donot follow here. TET is more than a competition exam. so consider this as a competitive exam. Otherwise no end for this.

      Delete
  7. உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை பேசிவிட்டோம் இனி உங்களின் போராட்டங்கள்தான் பேசவேண்டும்
    REPLY FROM Ms.BALA BHARATHI,MLA TO MY FACE BOOK PAGE REGARDING TEACHERS PROTEST.

    ReplyDelete
  8. Porattakkararkalai ninaithu kannil never vazhihirathu. Suzhnilaikaranamaga Ennal kalanthu kolla mudiyavillai varuthamaga ullathu.

    ReplyDelete
  9. Weitage method not followed in IAS and IPS and TNPSC Group I & II appointment.And even not followed Tamil Nadu Medical Service Commission for appointing Doctors and not followed JUDGES appointment.Eventhough they are nation builders not followed weitage method for their appointment. Then why in TET? It is a kind of social unjustice.Because due to weitage method rural student especially village students are more affected. The weightage method particularly brought for Urban and for matriculation students only.Will TRB publish how may village candidate were selected in TET 2013 exam ? my legal advice is to Anti weitage movement candidate approach supreme court to file affidivate seeking direction that without supreme court knowledge not issuing appointment order.to TET 2013 selected candidate.

    ReplyDelete
  10. 6 madham urangikondu irundheergala endru ketpavargaluku
    Court il case irukkumbothu selection list vittadu mudhal thavaru.nangal ninaithadhu munnurimai 90 matrum adharku mel eduthavargaluku endru.
    Edu ellai endru therithavudan porattam seigirargal ippody purigiradha idhai ethanai thadavai solluvadu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி