கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2014

கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நாளை முதல் தொடர்ந்து பல நாட்களுக்கு நடை பெற உள்ளது.
கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சிசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான கோடை பண்பலை 100.5 ல் காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நடைபெறும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி ரூபா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கோடை பண்பலை நிகழ்ச்சி அமைப்பாளர் பொன்.தனபாலன்,எட்வர்ட் கிங் ,சுப்பிரமணியன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி பூந்தளிர் நேரம் நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர்.மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள் வாசுகி,கலாவல்லி,சாந்தி,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் பயற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் கோடை பண்பலை நேயர் பேரவை காரைக்குடி காளிமுத்து,தேவகோட்டை முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் கண்ணதாசன் நன்றி கூறினார். கோடை பண்பலை வானொலி 22 மாவட்டங்களில் இரண்டரை கோடி நேயர்களை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks & Regards,
L.Chokkalingam,
M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.9786113160

5 comments:

 1. other district transfer pls contact waytonativeplace@gmail.com

  ReplyDelete
  Replies
  1. எவ்வாறு இது சாத்தியம் பணமா

   Delete
 2. I am BT asst from Salem.I want to transfer to namakkal.anybody wants to Salem.pls cal me especially namakkal or trichy. (9487029226)

  ReplyDelete
 3. I am BT asst from Salem.I want to transfer to namakkal.anybody wants to Salem.pls cal me especially namakkal or trichy. (9487029226)

  ReplyDelete
 4. i am SGT in tirvannamalai dt.iwant or anybody want transfer to sivagangai or pudkkottai dt.pls tell

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி