கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்:


கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் 2753 ஆசிரியர்கள் உள்ளனர்.

இதையடுத்து 129 அரசுப்பள்ளிகளில் 27 ஆயிரத்து 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு 2180 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கல்வித்துறையானது அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 619 ஆசிரியர்களும் , அரசுப்பள்ளியில் 391 ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக அறிவித்தது.இந்த அறிவிப்பிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது முற்றிலும் குளறுபடியான அரசானை எனவும், கடந்தகால மரபுகளை கல்வித்துறை மீறியுள்ளதாகவும் தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் , தற்போது மாணவர்களுக்கு கற்றல் நுணுக்கம் , பொது அறிவு வேண்டியுள்ளதால் அசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், தலைமை ஆசிரியர்கள் ஒருவாரம் 40 வகுப்புகள் நடத்தவேண்டும் என கல்வித்துறை தெரிவித்து உள்ளதாகவும் , இது எந்த வகையில் சாத்தியம் எனவும் தெரிவித்த அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை எந்த ஒரு கல்வியாளரும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர். இந்த அரசாணையினை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் எனவும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி