யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.


யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, இப்பணி களில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது.

இதற்கு நாடுமுழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் முதல்நிலை தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளர். இவர்களுக்கான முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி