தலைமை ஆசிரியர் கலந்தாய்வு : 248 பேருக்கு உத்தரவு வழங்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு : 248 பேருக்கு உத்தரவு வழங்கல்

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது. இதில், 248 பேருக்கு, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாக இருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது.

இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன. இன்று, 450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி