கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்

'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி