2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு.


ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

ஆட்சியர் வீரராகவ ராவ், தலைமை வகித்து பேசுகையில், ”ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் முடித்து வழங்க வேண்டும். அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்,” என்றார்.கூட்டத்தில் 34 மனுக்கள் வரப்பெற்று, அதில் ஐந்து இனங்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டது, பிற மனுக்களை, விரைவில் முடிக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் மனோகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி