தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2014

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.


தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல ஆண்டுதோறும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில்,இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், உயர்நிலைப் பள்ளிகளை பொருத்தவரை 300பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் அல்லது பணியில் இறந்துபோனால் ஏற்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவார்கள். கடந்த ஆண்டு இது போல ஏற்பட்ட பணியிடங்களை டிசம்பர் மாதம் தான் நிரப்பினர். இந்த ஆண்டு தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தி, ஜூலை மாதம் கவுன்சலிங் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் 300 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.

பள்ளிகள் திறந்து முதல் பருவத் தேர்வுகள் முடிந்து இரண்டாம் பருவம் தொடங்கிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களை தேர்வுக்கு தயார் படுத்த தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு முடிந்து எப்போது தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும் தெளிவாக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்திலாவது பணி நியமன ஆணைகள் வழங்கினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

7 comments:

 1. அன்பார்ந்த Whatsapp&internet நண்பர்களுக்கு
  சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
  ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FARWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
  Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please farward to all ur whatsapp &internet contacts

  ReplyDelete
 2. hai dear friends tommorrrow the big day for us

  because we are going to TRB and ask when publish ADW and MINORITY selection list

  mey be tomorrow we know the details of adw and minority list when published

  so please all

  friends come to chennai trb office

  espesaly GIRLS with our parants

  trb addres

  4 TH FLOOR
  ,EVK SAMPATH MAALIGAI
  ,DPI COMPOUND
  COLLEGE ROAD
  CHENNAI 600006]

  BUS ROOTE

  COIMPADE to EGMORE

  ReplyDelete
 3. hai dear friends tommorrrow the big day for us

  because we are going to TRB and ask when publish ADW and MINORITY selection list

  mey be tomorrow we know the details of adw and minority list when published

  so please all

  friends come to chennai trb office

  espesaly GIRLS with our parants

  trb addres

  4 TH FLOOR
  ,EVK SAMPATH MAALIGAI
  ,DPI COMPOUND
  COLLEGE ROAD
  CHENNAI 600006]

  BUS ROOTE

  COIMPADE to EGMORE

  ReplyDelete
 4. Dear Admin, please check your mail

  ReplyDelete
 5. Dear Admin, please check your mail

  Dear Admin, please check your mail

  ReplyDelete
 6. FLASH NEWS 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல். இரண்டாம் பட்டியல் என்னவாகும்??? www.gurugulam.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி