விவரம் வழங்காத 310 தமிழக கல்லூரிகள் : பட்டியலை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2014

விவரம் வழங்காத 310 தமிழக கல்லூரிகள் : பட்டியலை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ.,

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தல்படி, விவரங்களை பதிவேற்றம் செய்யாத, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த, 310 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும், ஏ.ஐ.சி.டி.இ., உயர்கல்வி பயிலும் மாணவர் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி களில் எந்த கல்லூரியில், ஆய்வுப் பணி நடந்தாலும், அதை அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த ஆய்வுச் சுருக்கத்தை, ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தியது. இதுதவிர, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீ காரம் பெற்ற, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரி கள், பாலிடெக்னிக் கல்லூரி கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும், கல்லூரி குறித்த அனைத்து விவரங்களையும், ஏ.ஐ.சி.டி.இ., இணைய தளத்தில் அதற்கான பகுதியில் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி இருந்தது. கல்லூரியில் படிக்கும் மாணவர் களோ, பிற மாணவர்களோ, அந்த கல்லூரியை பற்றி முழுமை யாக அறிந்து கொள்ள வசதியாக, இந்த ஏற்பாட்டை, ஏ.ஐ.சி.டி.இ., செய்தது. இதுவரை விவரம் பதிவு செய்யாத கல்லூரிகளின் விவரங்களை தற்போது ஏ.ஐ.சி.டி.இ., ?வளியிட்டுள்ளது. நாடு முழுவதும், 3,182 தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவற்றில், தமிழகத்தைச் சேர்ந்த, 310 கல்வி நிறுவனங்களும் அடக்கம்.


இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில், 'கல்லூரி, மாணவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. சில கல்லூரிகள், தகவல்களை ஒருங்கிணைத்து வைத்து

உள்ளன; அவற்றை வழங்கவில்லை. சில கல்லூரிகள், இன்னும் ஒருங்கிணைப்பு பணியையே துவக்கவில்லை. இந்த கல்லூரிகளுக்கு மீண்டும், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி