32 ஆண்டுகளுக்கு பின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க மீண்டும் வாய்ப்பு: இன்று ஹாக்கி பைனல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

32 ஆண்டுகளுக்கு பின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க மீண்டும் வாய்ப்பு: இன்று ஹாக்கி பைனல்


இன்ச்சான்: ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இன்று நடக்க உள்ள அரையிறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு அரங்கில் 32 ஆண்டுகளுககு பின் ஹாக்கி பைனலில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இப்பிரிவில் இரு அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 1-7 என்ற கணக்கில்தோல்வி அடைந்தது வெள்ளிப்பதக்கம் பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தங்கம் பதக்கம் பெறுவது என்ற குறிக்கோளுடன் களம் காண உள்ளது இந்திய அணி. 

ஏழாவது முறை: ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் 7-வது முறையாக மோத உள்ளது. முன்னதாக நடந்த 6 முறை பைனலில் இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த பைனலில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. (1962,70,74, 78, 82 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 

ஆசிய விளையாட்டில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் இந்தியா (1996,98) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் மட்டுமே தங்கப்பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. இதில் 98-ம் ஆண்டில் பாங்காங்கில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகித்த தன்ராஜ் பிள்ளை மூலம் தங்கப்பதக்கம் வென்றது. தன்ராஜ் பிள்ளை தமிழகத்தை சேர்ந்தவராவார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இப்பிரிவில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்றது. இருப்பினும் சீனா தென் கொரிய அணிகளை வென்றதன் காரணமாக மீண்டும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
பாகிஸ்தானை பொறுத்த வரையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. மேலும் இது வரை நடந்த ஆசிய போட்டிகளில் இப்பிரிவில் 8 தங்கத்தை வென்றுள்ளது. 

ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதி: இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைப்பதோடு மட்டுமல்லாது வரும் 2016-ம் ஆண்டில் ரியோடி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்தியா நிச்சயம் வெல்லும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி