குரூப் 4 பணியிடங்களுக்கு டிசம்பர் 21-இல் எழுத்துத் தேர்வு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2014

குரூப் 4 பணியிடங்களுக்கு டிசம்பர் 21-இல் எழுத்துத் தேர்வு - தினமணி

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செவ்வாய்க்கிழமை (அக்.14) வெளியிடுகிறது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 4 ஆயிரத்து 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை அறிவிக்கிறது. நிகழாண்டு அதிகபட்சமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றன.

கல்வித் தகுதி- தேர்வு தேதி: குரூப் 4 தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். குறைந்தபட்ச வயது 18. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 12-ஆம் தேதி. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வழியாகவே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்டத் தலைமையிடங்கள், தாலுகாக்கள் என மொத்தம் 244 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அவர்களது பதிவெண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவு செய்து, உரிய விவரங்களைப் பதிவிட வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தவர்கள் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே அவர் வகுப்புக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள், அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்த வேண்டும். இணையதளம் மூலமும் செலுத்தலாம். இதுகுறித்த சந்தேகங்களை 044-2533285, 25332833, கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 1002-இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி