ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல்


சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு கூடுதலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும்நடைமுறை நாளை அமலுக்கு வருகிறது.
அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை மாதத்தில் 6-வது முறை பயன்படுத்தும் போதிலிருந்து ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கில் இருப்பை அறிவது, மினிஸ்டேட்மென்ட் எடுப்பது ஆகிய பணமல்லாத நடவடிக்கைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இந்த நகரங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் அனுமதியும் 5-ல் இருந்து 3-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், சென்னையல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள சிறிய சேமிப்பு கணக்குகளிலும் இப்போதுள்ள நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது.

1 comment:

  1. thelivana vilakkam.but viraivil indha murai yella district laum nadaimurai padutha paduma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி